சிசிகஸ் சமர்
கிமு 410 இல் ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்டா இடையே கடற்படை போர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிசிகஸ் கடற்படை சமர் (Battle of Cyzicus, கிரேக்கம்: Kyzikos ) என்பது பெலோபொன்னேசியப் போரின் போது கிமு 410 மே அல்லது சூன் மாதத்தில் நடந்த ஒரு போராகும். [1] இந்த போரின் போது, ஆல்சிபியாடீசு, திராசிபுலஸ், தெரமெனெஸ் ஆகியோரின் தலைமையிலான ஏதெனியன் கடற்படை, மைண்டரஸ் தலைமையிலான எசுபார்த்தன் கடற்படையை வழிமறித்து அழித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஹெலஸ்பாண்டில் உள்ள பல நகரங்களின் கட்டுப்பாட்டை ஏதென்சு மீளப்பெற்றது. எசுபார்த்தன்கள் அடைந்த தோல்வியை அடுத்து, அவர்கள் சமாதான கோரிக்கையை விடுத்தனர். ஆனால் அதை ஏதெனியர்கள் நிராகரித்தனர்.
Remove ads
முன்னுரை
சிசிலியன் படையெடுப்புக்குப் பிறகு ஏதென்சு பலவீனமடைந்தது. அதனால் ஹெலஸ்பாண்டின் மீதான அதன் பிடியானது தளர்வுற்று பாரசீக ஆதரவுபெற்ற எசுபார்த்தவின் கைகளுக்குள் சென்றது. சிசிகஸ் நகர அரசு கிமு 411 கோடையில் ஏதென்சுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது. ஆனால் சைனோசெமா சமருக்குப் பிறகு ஏதெனியன் கடற்படையால் மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. [2]
கிமு 411 நவம்பரில் அபிடோசில் ஏதெனியரின் வெற்றியைத் தொடர்ந்து, எசுபார்த்தன் தளபதி மைண்டரஸ் எசுபார்த்தாவிற்கு துணைப்படைகளை அனுப்பினார் மேலும் புதிய தாக்குதல்களுக்கு திட்டமிடுவதற்காக பாரசீகத்திற்கான வடமேற்கு அனதோலியாவின் ஆளுநரான பர்னபாசசுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். [3] இவ்வாறு, கிமு 410 வசந்த காலத்தில், மிண்டரஸ் குறைந்தது 60 கப்பல்களைக் கொண்ட ஒரு கடற்படையை உருவாக்கினார். மேலும் பாரசீக ஆளுநர் பர்னபாசசின் துருப்புக்களின் ஆதரவுடன் சிசிகஸ் நகரத்தை கைப்பற்றினார். [4] ஹெலஸ்பாண்டில் உள்ள ஏதெனியன் கடற்படையானது புதிய வலிமையுடன் உள்ள எசுபார்த்தன் படையை எதிர்கொள்வதைத் தவிர்க்கவும், அல்சிபியாட்ஸ், தெரமெனெஸ், திராசிபுலசின் தலைமையின் கீழ் மீண்டும் அணிதிரட்டவும் செஸ்டோசில் உள்ள அதன் தளத்திலிருந்து கார்டியாவிற்கு பின்வாங்கியது. [5] சேரியாசின் தமைமையின் கீழ் தரைப்படைகள் உட்பட ஒருங்கிணைந்த ஏதெனியன் கடற்படை, மைண்டாரசுக்கு சவால் விடும் வகையில் ஹெலஸ்பாண்டிற்கு புறப்பட்டது. [6]
Remove ads
எதிர் சக்திகளின் வலிமை
பர்னபாசசு பெரிய பாரசீக தரைப் படைகளுக்கு தலைமை தாங்கினார், இதில் ஒரு முக்கியமான குதிரைப் படையும் அடங்கும். மிண்டரஸ், பெலோபொன்னேசியன் கடற்படைக்கு தலைமை வகித்தார். மிண்டரஸ் பெலொப்பொனேசியா மற்றும் பிற இடங்களில் இருந்து கப்பல்களைத் திரட்டியதாக டியோடோரோஸ் கூறுகிறார் (சிசிலியில் உள்ள சிராகுஸ் வரை இருந்து படைகள் திரட்டபட்டன), குறைந்தது 80 கப்பல்கள் வரை திரட்டினார், ஆனால் செனபோன் (நம்பத்தகுந்த ஆதாரம்) அவர்களிடம் 60 கப்பல்கள் இருப்பதாக கூறுகிறார். [7] எப்படியிருந்தாலும், பெலோபொன்னேசியர்கள் தங்கள் ஏதெனிய எதிரிகளைப் போல கடற்படைப் போரில் திறமையானவர்கள் அல்லர்.
ஆல்சிபியாடீசு, மூத்த தளபதியாக, ஐக்கிய ஏதெனியன் கடற்படையின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். தெரமெனெஸ் மற்றும் திராசிபுலஸ் அவரது துணைத் தளபதிகளாக செயல்பட்டனர். [8] ஆல்சிபியாடீசு ஏதெனிய சனநாயகவாதிகளால் ஆதரிக்கப்பட்டு, சமோசில் உள்ள ஏதெனியன் கடற்படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [9] ஏதென்சில் '5,000' சிலவர் ஆட்சிக் குழுவினரால் தேரமீன்சு நியமிக்கப்பட்டார். [10] ஏதெனியன் கடற்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு பற்றி பெலோபொன்னேசியர்கள் அறிந்திருக்கவில்லை. ஏதெனியன் கடற்படை 86 கப்பல்களைக் கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. [11]
Remove ads
சமர்
ஏதெனியன் படை ஹெலஸ்பாண்டிற்குள் நுழைந்தது. மேலும் அபிடோசில் உள்ள எசுபார்த்தன் தளத்தை இரவில் கடந்து அவர்களின் எண்ணிக்கையை மறைத்துக்கொண்டு, சிசிகசுக்கு வடமேற்கே உள்ள பிரோகோனெசஸ் (இன்றைய மர்மாரா ) தீவில் ஒரு தளத்தை நிறுவிக்கொண்டனர். [12] அடுத்த நாள், அவர்கள் சைசிகஸ் அருகே சேரியாசின் படையை இறக்கினர். ஏதெனியன் கடற்படை பின்னர் குழுக்களாக பிரிக்கப்பட்டது. ஆல்சிபியாட்சின் தலைமையில் 20 கப்பல்கள் சிசிகசை நோக்கி முன்னேறின, அதே சமயம் திராசிபுலஸ் மற்றும் தெரமெனிசின் தலைமையிலான முக்கிய ஏதெனியன் கடற்படை அதன் பின்னால் பதுங்கியிருந்தன. [13] மிண்டாரஸ், மிகச் சிறிய கடற்படையாக தோன்றி ஏதெனியப் படையைத் தாக்கும் வாய்ப்பைக் கண்டு, தனது முழுப் படைகளுடன் அவர்களை நோக்கிப் புறப்பட்டார். ஆல்சிபியாடெசின் படை தப்பி ஓடியது, மிண்டாரசின் கப்பல்கள் அவர்களை துரத்திச் சென்றது. இவ்வாறு இரு படைகளும் துறைமுகத்திலிருந்து நன்றாக வெளியேறிய பிறகு, ஆல்சிபியாட்ஸ் மைண்டாரசின் படையை எதிர்கொண்டார். மேலும் அவரத படை பின்வாங்கிச் செல்வதைத் தடுக்க திராசிபுலஸ் மற்றும் தெரமீன்ஸ் ஆகியோர் தங்கள் படைகளுடன் தோன்றினர். தான் ஒரு பொறியில் சிக்க உள்ளதை பார்த்த மிண்டாரஸ், ஒரு இடைவெளியில் புகுந்து, நகரின் தெற்கே உள்ள ஒரு கடற்கரையை நோக்கி படைகளை செலுத்தினார். அங்கு பர்னபாசஸ் தனது படைகளுடன் இருந்தார். எசுபார்த்தன் கப்பற் படைத் தொகுதி இழப்புகளைச் சந்தித்தது, மேலும் அவர்களுக்குப் பின்னால் ஏதெனியர்களுடன் கரையை அடைந்தனர். [14]
ஆல்சிபியாடெசின் துருப்புக்கள், ஏதெனியன் பின்தொடர்கைக்கு தலைமை தாங்கி, தரையிறங்கி, எசுபார்த்தன் கப்பல்களை மீண்டும் கடலுக்குள் இழுக்க முயன்றனர். எவ்வாறாயினும், பர்னபாஸசின் தலைமையில் இருந்த பாரசீக துருப்புக்கள் கரையில் சண்டையிட வந்தன. அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்த ஏதெனியர்களை கடலுக்குள் விரட்டத் தொடங்கினர். [15] இதைப் பார்த்த திராசிபுலஸ் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தனது படையை தரையிறக்கி, தனது படைகளை சேரியாஸ் தலைமையிலான படைகளுடன் இணைத்து போரில் இணையுமாறு தேரமேனிகளுக்கு உத்தரவிட்டார். ஒரு கட்டத்தில், திராசிபுலஸ் மற்றும் அல்சிபியாட்ஸ் இருவரும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமகாக இருந்ததால் படைகளுடன் பின்வாங்கினர். ஆனால் தெரமீன்ஸ் மற்றும் சேரியாசின் தலைமையிலான படைகள் வருகை அலையை மாற்றியது; எசுபார்த்தன்களும் பாரசீகர்களும் தோற்கடிக்கப்பட்டனர், மிண்டாரஸ் கொல்லப்பட்டார். எசுபார்த்தனின் அனைத்து கப்பல்களும் சிரக்கூசான் கூட்டாளிகளின் கப்பல்களைத் தவிர பிற கைப்பற்றப்பட்டன, சிரக்கூசான்கள் பின்வாங்கும்போது தங்கள் கப்பல்களை எரித்தனர். (Xen. Hell. 1.1.18)
Remove ads
பின்விளைவு
இந்த வியத்தகு வெற்றியைத் தொடர்ந்து, ஏதெனியர்கள் ஹெலஸ்பாண்டின் கடற்பகுதியை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அடுத்த நாள், அவர்கள் சிசிகசுக்குச் சென்றனர், அது சண்டையின்றி சரணடைந்தது. சிகசுக்கு அருகே சிக்கித் தவித்த எசுபார்த்தன் துருப்புக்களிடமிருந்து சென்ற கடிதத்தை இடைமறித்த போது அதில் "கப்பல்களை இழந்துவிட்டோம். மிண்டாரஸ் இறந்துவிட்டார். வீரர்கள் பசியால் வாடுகிறார்கள். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை." [16] என்று இருந்தது. தங்கள் கப்பற்படையின் அழிவால் மனச்சோர்வடைந்த எசுபார்த்தன்கள் அமைதி பேச்சுவார்தைக்கு ஏதென்சுக்கு தூதரை அனுப்பினர்; ஏதெனியர்கள் அதை நிராகரித்தனர். [17]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads