சிசியோன்
பண்டைய கிரேக்க நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிசியோன் (Sicyon அல்லது Sikyon, கிரேக்கம்: Σικυών ) என்பது ஒரு பண்டைய கிரேக்க நகர அரசாகும். இது கொரிந்திற்கும் அக்கேயாவிற்கும் இடையில் வடக்கு பெலோபொனேசியாவில் அமைந்துள்ளது. இது இன்றைய கொரிந்தியாவின் பிராந்திய அலகு ஆகும். டிரோஜன் போரின் போது இங்கு ஒரு பண்டைய முடியாட்சி நிலவியது. செவ்வியல் காலத்தில் நகரம் பல சர்வாதிகாரிகளால் ஆளப்பட்டது. கிமு 3 ஆம் நூற்றாண்டில் சனநாயக ஆட்சி உருவானது. சிசியோன் அதன் பண்டைய கிரேக்க கலைக்கும், அதன் பங்களிப்புகளுக்காகவும் கொண்டாடப்பட்டது. பல பிரபலமான ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை உருவாக்கியது. எலனிஸ்டிக் காலங்களில் இது அச்செயன் கூட்டணியின் தலைவரான சிசியோனின் அராடசின் பிறப்பிடமாக இருந்தது.

Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
