சிதம்பரச் செய்யுட்கோவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிதம்பரச் செய்யுட்கோவை [1][2] ஒரு கோவை இலக்கிய நூல். இது இலக்கிய அமைதியுடன் கூடிய நூல் ஆயினும் இலக்கணச் சிறப்புக் கொண்டது. இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர். வைணவம் சார்ந்த பாப்பாவினம் என்னும் நூலின் அமைப்பைத் தழுவி அமைந்த இந்நூல் சைவச் சார்பு கொண்டது. யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை போன்ற இலக்கண நூல்கள் சமண சமயம் சார்ந்தவை ஆதலால், வைணவ, சைவ சமயச் சார்புடன் கூடிய இலக்கண நூல்களின் தேவைகருதி இந்நூல்களை இயற்றியதாகக் கருதப்படுகின்றது[3].
Remove ads
அமைப்பு
இந்நூலில் வெண்பா விகற்பம், வெண்பாவினம், ஆசிரியப்பா விகற்பம், ஆசிரியப்பாவினம், கலிப்பா விகற்பம், கலிப்பாவினம், வஞ்சிப்பா விகற்பம், வஞ்சிப்பாவினம், மருட்பா ஆகிய ஒன்பது பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் மொத்தம் 84 எடுத்துக் காட்டுகள் உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
- சிதம்பரச் செய்யுட்கோவை - மூலம்
- சிறீ குமரகுருபரர் சுவாமிகள் பிரபந்தத்திரட்டில் சிதம்பரச் செய்யுட்கோவை விளக்கக் குறிப்புகளுடன் [தொடர்பிழந்த இணைப்பு] தமிழ் இணையப் பல்கலைக் கழகத் தளத்தில் இருந்து.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads