சிதறம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிதறம் (entropy, எந்திரோப்பி) அல்லது உலைதி என்பது வெப்ப இயக்கவியல் செயல்முறையில் பயன்படும் வேலையாக மாற்ற முடியாத ஆற்றலைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் வெப்பவியக்கவியல் பண்பு ஆகும். வெப்பவியக்கவியல் செயல்முறையில் பயன்படுத்தும் ஆற்றல்மாற்றக் கருவிகள், அல்லது இயந்திரங்கள் பயன்படும் வேலையாக மாற்றக்கூடிய ஆற்றலினாலேயே இயங்குகின்றன. இவை வேலையை ஆற்றலாக மாற்றும்போது கருத்தியல் அதிகபட்சத் திறனைக் கொண்டுள்ளது. இந்தச் செயன்முறையின்போது தொகுதியினுள் இயல்பாற்றல் அதிகரிக்கிறது, பின் எஞ்சிய வெப்பம் கழிவாகச் சிதறடிக்கப்படுகிறது. இக்கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் உருடால்ஃபு கிளாசியசு (Rudolf Clausius) ஆவார்.

Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads