சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா (S. Mallikarjunaiah)(1931 - 2014) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மூன்று முறை கர்நாடகாவின் தும்கூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மல்லிகார்ஜூனையா பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார்.
Remove ads
அரசியல்
இவர் பத்தாவது மக்களவையில் (1991-1996) மக்களவையின் துணைச் சபாநாயகராக இருந்தார். 1991, 1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் தும்கூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இத்தொகுதிக்கு 1977, 1980, 1996, 1999 நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றார்.[1] இவர் சட்ட மேல்சபை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, 1971 முதல் 1991 வரை ஜன சங்கம், ஜனதா கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1986 வரை பேரவையின் துணைத் தலைவராக பணியாற்றினார். ஜனசங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்துள்ளார்.[2]
Remove ads
பிறப்பும் இறப்பும்
1931 சூன் 26 அன்று தும்கூரில் பிறந்தார். இவர் 82 வயதில் மாரடைப்பால் 13 மார்ச் 2014 அன்று தும்கூரில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads