சித்தையன் கொலைச்சிந்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்தையன் கொலைச்சிந்து என்பது நாட்டாறியல் கதைப்பாடல்களில் ஒருவகையான கொலைச்சிந்து வகையைச் சேர்ந்தது. இக்கதைப் பாடல் சித்தையன் என்பவர் தன்னுடைய தந்தையையும், மனைவியையும் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வினை விவரிக்கின்றது. [1] இந்த சிந்து அக்கால தமிழகத்தில் பிரபலமானதாக இருந்துள்ளது.[2]
கதைமாந்தர்கள்
- சித்தையன்
- கன்னியப்ப முதலியார் - சித்தையன் தந்தை
- பாலம்மாள் - சித்தையன் மனைவி
கதை
கன்னியப்ப முதலியாரின் மகனான சித்தையன் என்பவர் பாலம்மாள் என்பவரை மணம் செய்துகொள்கிறார். சித்தையன் வெளியூர் சென்ற தினத்தில், கன்னியப்ப முதலியார் மருமகள் பாலம்மாள் மீது மோகம் கொண்டு அனுக பார்க்கின்றார். பாலம்மாள் மறுத்துவிடுகிறார். இதனால் கோபம் கொண்ட கன்னியப்ப முதலியார், பாலம்மாள் மீது தகாத குற்றங்களைச் சாட்டி சித்தையனுக்கு கடிதம் எழுதுகிறார்.
அக்கடிதத்தினைப் படித்த சித்தையன், பாலம்மாளின் மீது கோபம் கொண்டு, அவளை கொலை செய்துவிடுகிறார். அதன்பிறகு சித்தையன் கனவில் வந்த பாலம்மாள், தனக்கு நிகழ்ந்ததை எடுத்துரைக்கின்றார். அதனால், தவறு தன்னுடைய தந்தை மீது இருப்பதை உணர்ந்த சித்தையன், தந்தையை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads