சிந்து அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

சிந்து அருங்காட்சியகம்
Remove ads

சிந்து அருங்காட்சியகம் ('Sindh Museum') பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்து நகரத்தில் அமைந்துள்ளது.

Thumb
சிந்து அருங்காட்சியகம்

சிந்து அருங்காட்சியகம் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] சிந்துவின் கலாச்சார வரலாற்றின் பதிவுகளை சேகரிப்பது, பாதுகாப்பது, ஆய்வு செய்தல் மற்றும் காட்சிப்படுத்துதல் போன்றவை அருங்காட்சியகம் நிறுவப்பட்டதற்கான நோக்கங்களாகும். அருங்காட்சியகத்தில் சிந்து மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியம் வைக்கப்பட்டுள்ளது. சம்மா, சூம்ரா, கல்கோரா மற்றும் தல்பூர் காலங்கள் உட்பட சிந்துவின் பல்வேறு ஆட்சி காலங்களின் பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். மேலும் சிந்தி மக்களின் வாழ்க்கை முறையையும் இங்கு அறியமுடியும்.[2]

நவீன சிந்துப் பெண்களை பழைய உலகின் பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் கலைக் கண்காட்சியும் அருங்காட்சியக கண்காட்சிகளில் உள்ளது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads