சினாபுங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சினாபுங் (Sinabung, இந்தோனேசியம்: Gunung Sinabung) என்பது இந்தோனேசியாவின் சுமாத்திராப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். மெதான் என்ற சுமாத்திராவின் முக்கிய நகரத்தில் இருந்து தென்மேற்கே 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த எரிமலை வெடித்ததற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இது முதற்தடவையாக 2010, ஆகத்து 29 இல் வெடிக்கும் வரை பதியப்பட்டிருக்கவில்லை[1].
Remove ads
2010 வெடிப்பு

இந்த எரிமலை 1600 ஆம் ஆண்டில் இருந்து சீற்றமடையாமல் இருந்து வந்துள்ளது[2]. முதற்தடவையாக இது 2010 ஆகத்து 29 அதிகாலையில் உள்ளூர் நேரப்படி 00:06 மணிக்கு வெடிக்க ஆரம்பித்தது. 1.5 கி.மீ. உயரத்திற்கு இதன் தூசுகள் வீசப்பட்டன. குழம்புகள் எரிமலைவாயில் வீழ்ந்தன[3].
2010 செப்டம்பர் 3 வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 கி.மீ. உயரத்திற்கு தூசுகள் கிளம்பின.[4] செப்டம்பர் 7 இல் மீண்டும் வெடித்தது. இதன் சீற்றம் அதிகமானதாக இருந்தது.
Remove ads
2013 வெடிப்பு
2013 செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு சினாபுங் மீண்டும் வெடித்தது. 3,700 பேர் இருப்பிடங்களை விட்டு நகர்ந்தனர்.[5] மீண்டும் 2013 நவம்பர் 5 இல் வெடித்ததில், வானில் 7-கி.மீ. தூரத்திற்கு தூசுகள் கிளம்பின.
2014 வெடிப்பு
2014 சனவரி 4 இல் மீண்டும் வெடித்தது. 4,000-மீட்டர் உயரத்திற்கு தூசுகள் கிளம்பின.[6] 2014 பெப்ரவரி 1 இல் மீண்டும் வெடித்தது. 14 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[7] இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்பள்ளி மாணவர்கள். இவர்கள் எரிமலையைக் காண வந்திருந்தனர்..[8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads