சினிமா எக்ஸ்பிரஸ்
1980 ல் தமிழ்நாடு, சென்னையில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ்ப் பொழுதுபோக்கு இதழ் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சினிமா எக்ஸ்பிரஸ் என்பது தமிழ்நாடு, சென்னையில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ்ப் பொழுதுபோக்கு இதழாகும். இவ்விதழை தினமணி, கன்னடப் பிரபா போன்ற பிரபல பத்திரிகைகளை வெளியிடும் தி நியூ இந்தியன் எக்சுபிரசு குழுமம் வெளியிட்டு வந்தது. சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் ஆண்டுதோறும் தமிழ்த் திரைத்துறையில் பங்களிக்கும் சிறந்த கலைஞர்களுக்கு தேசிய விருதுகளுக்கு ஒப்பான வகையில் "சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளை" வழங்கிக் கௌரவித்தது.[1][2] 1980 சனவரில் இருந்து வெளியான இவ்விதழ் 2016 பெப்ரவரி 16 இதழுடன் அச்சுப் பிரதி வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது.
Remove ads
வரலாறு
சினிமா எக்ஸ்பிரசு தனது முதலாவது இதழை 1980 சனவரி 10 இல் வெளியிட்டது. முதலாவது இதழை அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் வெளியிட்டார்.[3] இதன் முதலாவது ஆசிரியராக இராமமூர்த்தி பணியாற்றினார். இதன் ஆரம்ப விலை ரூ. 1.50 ஆக இருந்தது. இதன் கடைசி இதழ் 2016 பெப்ரவரி 16 இல் வெளிவந்தது. அப்போது அதன் விலை ரூ. 15.00 ஆகும்.[4] இதன் பின்னர் இதே பெயரில் இணைய வழியில் இந்தியன் எக்சுபிரசு குழுமத்தினர் வெளியிட்டு வருகின்றனர்.[5]
Remove ads
விருதுகள்
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 1981 முதல் ஆண்டுதோறும் “சிறந்த திரைப்படம்”, “சிறந்த கதாசிரியர்”, “சிறந்த நடிக, நடிகையர்”, சிறந்த இயக்குநர்” போன்ற விருதுகளை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு வழங்கி வந்தது.[6][7][8][9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads