சின்னமுட்டம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சின்னமுட்டம் (Chinnamuttom) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த கிராமம் ஆகும். தமிழ் பெயர் முட்டு என்பதிலிருந்து இக்கிராமத்தின் பெயர் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ள துறைமுக கிராமமே சின்னமுட்டம். இங்குள்ள மக்கள் தூய தோமையார் மற்றும் தூய பிரான்சிசு சவேரியார் ஆகியோரால் மனமாற்றம் செய்யப்பட்டவர்கள். குமரிமுட்டம் என்றும் கலைமுட்டம் என்றும் இக்கிராமம் அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள நகரம் கன்னியாகுமரியாகும். சிறப்பு நிலை நகராட்சியான இக்கிராமம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக தலைமையகமான நாகர்கோவிலில் இருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சின்னமுட்டம் கிராமம் 8.094345 வடக்கு77.561445 கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் சின்னமுட்டம் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரே மீன்பிடி துறைமுகம் சின்னமுட்டம் மட்டுமே ஆகும். 50% இந்திய அரசின் மானியத்தின் கீழ் 684.70 லட்சம் செலவில் 1984 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இத்துறைமுகம் கட்டப்பட்டது.[2]
Remove ads
காலநிலை
சின்னமுட்டம் கிராமத்தின் காலநிலைத் தரவை பின்வரும் அட்டவணை காட்டுகிறது:
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads