சிமா சியான்

சீன வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

சிமா சியான்
Remove ads

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் சிமா (司馬).

மேலதிகத் தகவல்கள் சிமா சியானின் பெயர்கள் ...
Thumb
சிமா சியான்

சிமா சியான் (Sima Qian) (கிமு 145 அல்லது 135 – கிமு 86) என்பவர், சீன வம்சக் காலத்துப் பெரிய எழுத்தர்களுக்குத் தலைவராக இருந்தார். மஞ்சள் பேரரசர் தொடக்கம் பேரரசர் ஆன் வூடி வரையான 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியை உட்படுத்திய பெரும் வரலாற்றாளர்கள் பற்றிய பதிவுகள் என்னும் இவரது சீன வரலாறு பற்றிய நூல் பெரிதும் போற்றப்படுவது. இதனால், இவர் சீன வரலாற்றுவரைவியலின் தந்தை எனப்படுகின்றார். இவரது ஆக்கங்கள் பிற்காலத்தின் சீன வரலாற்றுவரைவியலுக்கு அடிப்படையாக அமைந்தன.

Remove ads

இளமைக் காலமும் கல்வியும்

சிமா சியான் இன்றைய சாங்சியின், ஆன்செங்குக்கு அருகின் இருந்த லாங்மென் என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது குடும்பம் வரலாற்று வரைவாளர் குடும்பம் ஆகும். இவரது தந்தையாரும் பேரரசர் ஆன் வூடியின் அரசில் பெரிய எழுத்தர்களுக்குத் தலைவராக இருந்தார். இவரது பணி அரச நூலகத்தை மேலாண்மை செய்வதும், நாட்காட்டி கவனித்தலும் ஆகும். தந்தையின் செல்வாக்கு காரணமாக சிமா சியான் தனது 10 ஆவது வயதிலேயே பழைய எழுத்தாக்கங்களைப் படித்திருந்தார். இவர் அக்காலத்தில் பெயர் பெற்ற கான்பூசியப் பெரியார்களான கொங் ஆங்குவோ, டொங் சொங்சூ ஆகியோருக்கு மாணவராக இருந்தார். இருபதாவது வயதில் அவரது தந்தையாரின் உதவியுடன் சிமா சியான் நாடு தழுவிய பயணம் ஒன்றைத் தொடங்கினார். இப் பயணத்தின்போது இவரது முதன்மை ஆக்கமான சிசிக்காக பல பயனுள்ள நேரடி வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொண்டார். பழைய கதைகள் வதந்திகள் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வதும், பழைய நினைவுச் சின்னங்களுக்குச் செல்வதுமே இவரது பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சாண்டொங், யுனான், எபெய், செசியாங், சியாங்சு, சியாங்சி, உனான் ஆகிய இடங்களுக்கு இவர் பயணம் செய்தார்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads