சியாம் சிங் யாதவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சியாம் சிங் யாதவ் (Shyam Singh Yadav)(பிறப்பு 31 மார்ச் 1954) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17வது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
Remove ads
அரசியல்
சியாம் சிங் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினராகவும், மக்களவையில் அக்கட்சியின் தலைவராகவும் உள்ளார்.[2][3][4] இவர் 2019 முதல் நாடாளுமன்ற ஆவணக் குழுவின் தலைவராகவும் உள்ளார். நிலக்கரி மற்றும் எஃகு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். இலாப அலுவலகங்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழு; நாடாளுமன்ற பொது நோக்கக் குழுவின் (மக்களவை) உறுப்பினர் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் போன்ற பொறுப்பில் உள்ளார்.[5] இவர் முன்னாள் உத்தரப்பிரதேச குடிமையியல் அதிகாரி ஆவார்.[6]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
யாதவ் 31 மார்ச் 1954 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உமா சங்கர் சிங் யாதவ் மற்றும் இந்திராவதி யாதவ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது இளம் அறிவியல், முதுகலை அறிவியல் (1976) மற்றும் இளங்கலைச் சட்டம் (1979) பட்டங்களை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்றார் . இவர் 11 மார்ச் 1986-ல் புஷ்பா யாதவை மணந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் ஒரு வழக்குரைஞர் மற்றும் விவசாயம் செய்கிறார். இவர் இராணிபட்டி கிராமத்தில் வசிக்கிறார்.[5][1]
Remove ads
அரசுப் பணி
யாதவ் அரசு ஊழியராக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.[7]
முன்னாள் அரசு ஊழியராக, யாதவ், துணைப் பிரிவு நீதிபதி, நகராட்சி ஆணையர், சிறப்புச் செயலர் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டத் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.[8]
விளையாட்டு வீரர்
யாதவ் ஒரு துப்பாக்கிச் சுடும் வீரர் ஆவார். இவர் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.[6] இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கும் பயிற்சி அளித்துள்ளார்.[7] பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் (2008) மற்றும் மெல்போர்ன் பொதுநலவாயப் விளையாட்டுகள் (2006) போட்டிகளில் பயிற்சியாளராகப் பங்கேற்றுள்ளார்.[9][10] யாதவ் உத்தரப் பிரதேச மாநிலத் துப்பாக்கிச் சங்கத்தின் தலைவராகவும், உத்தரப் பிரதேச ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். இந்தியத் தேசியத் துப்பாக்கி சங்கத்தின் பொருளாளராகவும் இருந்துள்ளார்.[11] 2016-2019 வரை மும்பையில் தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[5]
Remove ads
விருது
- இலட்சுமண் விருது, உ.பி அரசு 2000 [12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads