சியாயேசியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சியாயேசியம் (Gayageum) என்பது கொரிய இனத்தின் தொன்மை வாய்ந்த கம்பி இசைக்கருவியாகும். அது, வடகிழக்குச் சீனாவின் ஜிலின் மாநிலத்தில் யெபியென் கொரிய இனத் தன்னாட்சி வட்டாரத்தில் இசைக்கப்பட்டு வரும் மரபிசைக்கருவியாகும். சீனாவிம் பாரம்பரியமிக்க ஹென் இனத்தவரின் குச்சங்(Guzheng) என்னும் இசைக்கருவியைப் போன்ற வடிவம் உடையது. கி.பி. 500-ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இசைக்கப்பட்டு வரும் இசைக்கருவியாகும். பண்டைய கொரிய நாடான சியாயேசின் நாட்டு மன்னர் குச்சன் வடிவத்தில் ஒரு வகை நரம்பிசைக் கருவியைத் தயாரித்தார். 1500 ஆண்டு வரலாறுடைய இக்கருவி சியாயேசின் என்ற பெயரால் கொரிய இனமக்களால் அழைக்கப்படுகிறது.

Remove ads
மேம்பாடு
பண்டைகாலத்தில் சியாயேசின் மிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனுடைய ஓசையும் மிக தணிவாகவே ஒலித்தது. பின்னர் கொரிய இன மக்களால் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வந்து,, இறுதியில் தேசிய இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த தரமான சியாயேசியம் என்னும் தற்கால இசைக்கருவியானது.சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், இவ்விசைக்கருவி மேலும் மேம்பட்டது. 18 அல்லது 21 தந்திகள் வரை கொண்ட சியாயேசின் இசைக்கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
Remove ads
இசைக்கும் முறை

சியாயேசின் இசைக்கருவியின் ஒலி இனிமையானது. இவ்விசைக்கருவியை மீட்டும் போது, இடது கையால் தந்திகளை வருடி, வலது கையால் இசையின் அளவை நிர்ணயிக்கலாம். இவ்விசைக்கருவி, இரு குரல் இசை அல்லது கூட்டுக்குரலிசையில் பயன்படுத்தப்பகிறது. மக்களின் மகிழ்ச்சி, கோபம், துயரம் உள்ளிட்ட வேறுபட்ட உணர்ச்சிகளை இவ்விசைக்கருவி மூலம் வெளிப்படுத்தலாம். குறிப்பாக, மகிழ்ச்சிகரமான நாட்டுப்புற இசைப் படைப்புகளை இயக்குவதற்கு இவ்விசைக்கருவி தகுந்தது. முன்பு, இவ்விசைக்கருவியை இயக்குப்பவர்களில் பெரும்பாலோர் ஆண்களாகவே இருந்தனர் ஆனால், இவ்விசைக்கருவி, கொரிய இன மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றாக மாறியுள்ளதால், பெண்களும் அதிகம் இசைக்கின்றனர்.
Remove ads
கூட்டிசை
சியாயேசின் முக்கியமாக கூட்டிசைப் பாடல்களைப் பாடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறாது. பாரம்பரியமிக்க தேசிய இன இசைக் குழுவில் இதனைப் பயன்படுவதுண்டு. இவ்விசைக்கருவியை மீட்டும் போது, தேசிய இன ஆடை அணிந்த பத்துக்கும் அதிகமான கொரிய இன மகளிர் மேடையில் ஒரு வரிசையாக இருந்து, சியாயேசினின் பின் பகுதியைத் தரையில் வைத்து, அதன் முற்பகுதியை தமது கால் முழங்காலில் சாய்த்து வைத்து, இடது கையால் தந்தியை வருடி, வலது கையால் இசை அளவை நிர்ணயித்து, இசை இயக்குவதோடு, பாடலும் பாடுவர். அப்போது, இசைக்கருவியின் இனிமையான ஒலியும் பாடலொலியும் இணைந்து ரசிகர்களை மகிழ்விக்கும்.
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
