சிரார்த்தம்

From Wikipedia, the free encyclopedia

சிரார்த்தம்
Remove ads

சிரார்த்தம் (சமசுகிருதம்: श्राद्ध) என்பது இந்து மத அனுட்டனாங்களில் அபரக்கிரியைகளில் ஒன்றாகும். சிரார்த்தம் என்பதன் பொருள் சிரத்தையோடு செய்யவேண்டியது என்பதாகும். இதனை பிதிர்கருமம் எனும் பொருளில் எல்லாப் பிதிர்க்கருமங்களையும் குறிப்பதற்குப் பயன்படுத்துவர்.[1][2][3][4] எனினும் சிரார்த்தம் என்பது, ஆட்டைத்திவசம்(வருஷாப்திகம்) அதாவது ஒருவா் இறந்து ஒரு ஆண்டின் பின் செய்யும் சிரார்த்தம், திவசம் என்பது ஆண்டுதோறும் அதே திதியில் செய்யப்படுவது ஆகும். இதனைத் திதி என்றும் கூறுவர்.

Thumb
கூட்டுச் சிராத்தம் செய்யும் காட்சி, ஜெகன்நாத் படித்துறை, கொல்கத்தா

சிரார்த்தத்தின் நோக்கம், இறந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதும், அவர்களின் ஆன்மாக்களை சாந்தப்படுத்துவதும், அவர்களின் பாவங்களைப் போக்குவதும் ஆகும்[5]. சிராத்தம் என்பது இறந்த மூதாதையரின் நினைவாக செய்யப்படும் ஒரு சடங்கு; இந்த சடங்கு இந்துமதத்தினரில் அனைத்து ஆண்களுக்கும் (துறவிகள் தவிர) விதிக்கப்பட்ட ஒரு சமூக மற்றும் மதப் பொறுப்பாகும். இது இறந்தவர்களின் ஆன்மாக்களை அவர்களின் மறுபிறப்பு மற்றும் மறுபிறவிக்கு முன் கீழ் பகுதிகளிலிருந்து உயர்ந்த பகுதிகளுக்கு அவர்களின் புனித யாத்திரையில் பாதுகாத்தல் மற்றும் ஆதரவளிப்பதாகும்[6]. சிராத்தம் மிகுந்த பக்தியுடன் செய்வதன் முக்கியத்துவம் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ""மகன் தனது பெற்றோரை 'புட்' என்ற நரகத்தில் இருந்து காப்பாற்றுகிறான், அதனால் 'புத்திரன்' என்று அழைக்கப்படுகிறான் என்று கருட புராணத்தின் (21.32) வசனத்தை மேற்கோள் காட்டி கூறப்படுகிறது[7]. "மூதாதையர்கள்" என்ற வார்த்தையானது இறந்த மூதாதையர்களின் ஆன்மாக்கள் அல்லது சரியான சடங்குகளின்படி தகனம் செய்யப்பட்ட அல்லது தகனம் செய்யப்பட்ட அனைத்து இறந்தவர்களின் ஆன்மாக்களையும் குறிக்கிறது[8].

சிராத்தம் செய்யும்போது இறந்தவரது ஆன்மா ஈடேற்றம் அடைவதற்கு, பரிபூரண சித்தியின் பொருட்டு அரிசி, உழுந்து, எள், தயிர், பால், தேன், வாழைப்பழம், நெய் எனும் பொருட்கைள உருண்டையாக உருட்டி பிண்டமிடல் இடம்பெறும்.

சிராத்த கிரியைகளி்ல் எள்ளும், தண்ணீரும் இறைத்தல் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. தர்ப்பையைக் குறுக்காகப் பிடித்து, அத் தர்ப்பை தர்ப்பப்பை மூலத்திலிருந்து எள்ளுக்கலந்த நீரை பெருவிரல் மூலமாக விழச்செய்வர். அவ்வேளையில் தங்கள் முன்னோர்களின் மூன்று தலைமுறைப் பெயர்கள் சொல்லப்படும்.[9]

தர்ப்பண முடிவிலே "என் குலப்பிதிரர்களே, பூமியில் விடப்பட்ட இந்த நீரினால் நற்கதியும், திருப்தியும் அடையுங்கள்" என்று கூறி, தர்ப்பை எள்ளுடன் தீர்த்தத்தில் இடப்படும்.

ஒருவர் இறந்த திதியைக் கொண்டே சிராத்தம் நிச்சயிக்கப்படுகின்றது. ஒரு மாதத்தில் இரு தடவைகள் சிராத்த திதி வந்தால் பின்னைய திதியினைக் கைக்கொண்டு சிராத்தம் செய்வது விதி.

உத்தர காமிக ஆகமத்தில் 29வது படலத்தில் சிராத்தவிதி கூறப்பட்டுள்ளது.[10]

சிராத்தத்தின் முடிவில் பசுக்களுக்கு உணவு வழங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது. [11] பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்தினர்க்கும், இனத்திற்கும் தருமம் செய்தல் தலையான தருமம் என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார்

"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை"[12]
Remove ads

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads