சிரியனான எபிரேம்

From Wikipedia, the free encyclopedia

சிரியனான எபிரேம்
Remove ads

சிரியனான புனித எபிரேம் (சிரியம்: ܡܪܝ ܐܦܪܝܡ ܣܘܪܝܝܐ, கிரேக்கம்: Ἐφραίμ ὁ Σῦρος; இலத்தீன்: Ephraem Syrus; சுமார். 306 – 373) என்பவர் 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அசிரிய திருத்தொண்டரும் சிரிய மொழியில் புலமைப்பெற்ற பாடலாசிரியரும், இறையியலாளரும் ஆவார்.[1][2][3][4] இவரின் படைப்புகள் கிறித்தவர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாக இருந்தன. பல கிறித்தவப் பிரிவுகள் இவரை புனிதர் என ஏற்கின்றன. திருச்சபையின் மறைவல்லுநர் என கத்தோலிக்க திருச்சபையில் ஏற்கப்படுகின்றார். சிரிய மரபுவழி திருச்சபையில் இவருக்கு மிக முக்கிய வணக்கம் செலுத்தப்படுகின்றது.

விரைவான உண்மைகள் சிரியனான புனித எபிரேம், திருத்தொண்டர், மறைப்பணியாளர், மறைவல்லுநர் ...

எபிரேம் பாடல்கள், கவிதைகள், மறைஉரைகள் மற்றும் உரைநடை வடிவில் விவிலிய விளக்க உரைகள் பல எழுதி உள்ளார். இவை துன்பவேளையில் திருச்சபையை சீர்திருத்த உதவும் வகையில் நடைமுறை இறையியல் படைப்புக்களாக இருந்தன. எனவே மக்கள் பல நூற்றாண்டுகளாக இவரது மரணத்திற்கு பின்னரும், இவரது பெயரில் பல நூல்களை (pseudepigraphal) எழுதினர். இவரின் படைப்புகளில் மேற்கு சிந்தனைகளின் தாக்கம் சிறிதாகவே இருப்பதால் அவை கிறித்தவத்தின் துவக்க வடிவத்தைக் காட்டுகின்றது. இவர் சிரிய மொழி பேசும் திருச்சபை தந்தையர்களுள் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads