சிறப்புப் பொருளாதார மண்டலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பொதுச் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சிறப்புச் சலுகைகளுடன் ஓர் அரசால் ஏதுவாக்கப்படும் கட்டமைப்பே சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economiz Zone (SEZ)) ஆகும். இதைத் தமிழில் சிறப்புப் பொருண்மிய வலயம் என்றும் குறிப்பிடுவர்.[1][2][3]

சிறப்புப் பாதுகாப்பு

இது வரையறுக்கப்பட்ட புவியியல் பிரதேசத்தில் மதில்கள் சிறப்புப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றது. இதில் முதலீடு செய்யும் வர்த்தகங்களால் ஏற்படும் பொருளாதார விருத்தியும் வேலைவாய்ப்புக்களும் இத்தகைய அரசின் கொள்கையை நியாயப்படுத்துகின்றது. எனினும் இது சமனற்ற பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்வதாக அனைத்துலக நாணய நிதியம் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நாட்டின் பொது நிலைமையிலிருந்து விலகி தமது வர்த்தகத்தை மேற்கொள்ள உதவுகின்றன.

Remove ads

விமர்சனங்கள்

  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் முக்கியமாக ஈடுபடாமல், அரசின் சலுகைகளைப் பெற்று இடங்களை அபகரித்து விலையுயர்ந்த வீடுகளைக் கட்டி விற்று இலாபம் ஈட்டுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.
  • "சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தரிசு நிலங்களை வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு விவசாய நிலங்களை எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது. நாட்டில் சிறு சிறு தொழில்கள் நசிந்து வரும் வேளையில் சிறு தொழில்களை ஊக்குவிக்காமல் அன்னிய செலாவணியை மட்டும் கருத்தில் கொண்டு இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு உத்தரவின் பேரில் மாநில அரசு நிலங்களை கையகப்படுத்துகிறது. தமிழகத்தில் நாங்கள் விளைச்சல் நிலங்களை கையகப்படுத்த விட மாட்டோம். கடுமையாக எதிர்ப்போம். இதை நாங்கள் எச்சரிக்கையாக விடுக்கிறோம்" - பாமக நிறுவனர் ராமதாசு பரணிடப்பட்டது 2007-01-04 at the வந்தவழி இயந்திரம்
  • "இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ள 67 SEZ திட்டங்களுக்காக மட்டும் 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள திட்டங்களையும் சேர்த்தால் 2,74,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கஜினி முகமது இந்தியாவை 17 முறை கொள்ளையடித்ததை வைத்து அரசியல் நடத்தும், சங்பரிவாரக் கூட்டங்களுக்கு பல லட்சக்கணக்கான மக்களின் நிலம் கண்ணெதிரே கொள்ளையடிக்கப்படுவது ஏனோ தெரியவில்லை! பிரித்தானியாவின் இந்தியாவிற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலக்கொள்ளை நடப்பது நவீன வரலாற்றில் இதுதான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்."

நவீன காலனிகளா?

"இம் மண்டலத்திற்கான பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உட்பட 27 வகைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திடவும், ஒப்பந்தக் கூலி என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும், 8 மணி நேர வேலை பாதுகாப்பு, இ.எஸ்.ஐ., மருத்துவம், பணிப் பாதுகாப்பு என எந்த சட்டரீதியான பாதுகாப்பும் இம்மண்டலத்திற்குள் செல்லுபடியாகாது. மொத்தத்தில் சுதந்திர இந்தியாவிற்குள் ஏகபோக மற்றும் பெரு முதலாளிகளின் நவீன காலனிகளாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன."

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads