சிறார் கூர்நோக்கு இல்லம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறார் கூர்நோக்கு இல்லம் (Juvenile Care Home) என்பது இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் செய்யும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக [1].மாவட்ட சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, வருங்காலங்களில் தீயவழிகளில் மனத்தைச் செலுத்தாமல், நல்வழியில் மனத்தைச் செலுத்த பயிற்சி தரப்படுகிறது. கூர்நோக்கு இல்லங்களில், சிறார்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வி வழங்கப்படுகிறது. மாவட்டங்களில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளின் நிதிகள் மூலம், மாநில அரசுகளின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு (District Child Protection Unit) மற்றும் இளைஞர் நீதிக் குழுமத்தின் (Juvenile Justice Board) வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது.
கோவை மாவட்ட சிறை மீண்டோர் நலவாழ்வு சங்கத்தினரால், கோவை நகரத்தில் சிறார் கூர்நோக்கு இல்லம் 1938 முதல் செயல்படுகிறது.[2]
கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறார்களின் வயது 18க்கு மேற்பட்டால், அவர்களின் குற்றச்செயலுக்கு ஏற்ப, மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவர்.[3]. [4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads