சிறார் மீதான பாலுணர்வு நாட்டம்

வயது வராத இளஞ் சிறார்கள் மீதான நாட்டம் அல்லது பிரத்தியேகமான ஈர்ப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிறார் மீதான பாலணர்வு நாட்டம் அல்லது சிறார்பால் ஈர்ப்பு என்பது வயதுவந்த நபரொருவர் முதன்மையாகவோ, முழுக்கவோ குழந்தைகள்மீதும் வயதுவராது இளஞ்சிறார்கள் மீதும் பால்நாட்டம் கொள்ளும் உளநோய் ஆகும்.[1][2] பொதுவாக சிறுமிகள் 10, 11 வயதிலும் சிறுவர்கள் 11, 12 ஆண்டுகளில் வயதுக்கு வந்தாலும்,[3] 13 வயதுக்குக்குறைவான சிறார்கள் மீது பால்நாட்டம் கொள்வதையே சிறார்பால் ஈர்ப்பு நோய்க்கான வரையறையாகக் கொள்கின்றனர்.[1] குறைந்தது 16 வயதடைந்து, தன்னைக்காட்டிலும் 5 வயதுக்கும் மேலாகக் குறைவான சிறார்மீது நாட்டம் கொள்பவர்களையே இத்தகைய நோயுடையவராகக் கொள்வர்.[1][2]

விரைவான உண்மைகள் சிறார் மீதான பாலுணர்வு நாட்டம், சிறப்பு ...

சிறார்பால் ஈர்ப்பை சிறார்பால் நாட்டக்கேடு என உளநோய்களுக்கான நோயறுதியிடல் புள்ளியியல் கையேடு (உநோபுகை-5) குறிப்பிடுகிறது. வயதுவராத சிறார்களை முன்வைத்துத் தோன்றும் அழுத்தமான, திரும்பத்திரும்ப வரும் கற்பனைகளையும், அந்தக்கற்பனைகள் வழி ஏற்பனும் நடத்தைகளையும், அந்நடத்தைகளைக் கட்டுக்குள் வைக்கவியலாமையும் உள்ளடக்கிய பிறழ்வான வக்கிர உணர்வை இந்த உளக்கேட்டின் வரையறாக வகுத்துள்ளனர்.[1] பன்னாட்டு நோய்கள் வகைப்பாட்டில் இது வயது வராத சிறார் அல்லது வயதுவரத்தொடங்கும் நிலையிலுள்ள சிறார்மீதான பாலுணர்வுத் தேர்வு என்று இதை வரையறுத்துள்ளார்கள்.[4]

உளநோய் மருத்துவத்துறைசாராது பொதுவாக சிறார்பால் ஈர்ப்பு என்பதைச் சிறுவர்கள் மீதான எத்தகைய பாலுணர்வு ஈர்ப்பைக் குறிக்கவும் சிறார் பாலியல் வன்கொடுமை போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.[5][6] இது சிறார்மீதான பாலியல் ஈர்ப்பு, அர்கள் மீதான வன்கொடுமைகள், வயதுக்குவரும்நிலையிலுள்ளோர் மீதான ஈர்ப்பு, அண்மையில் வயதுக்குவந்தோர் மீதான ஈர்ப்பு முதலியவற்றை வேறுபடுத்தத் தவறுகிறது.[7] இதுபோல துல்லியமற்ற பயன்பாடுகளைத் தவிர்க்க வேண்டுமென்று ஆய்வர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் சிறார்மீதான வன்கொடுமைகள் புரிவோர் சிறார்பால் ஈர்ப்பு நோயுடையவராக இருக்க வாய்ப்பிருந்தாலும்[6][8] அவர்கள் முதன்மையாகவோ மொத்தமாகவோ குழந்தைகள்பால் மட்டுமே ஈர்ப்புடையவராய் இருந்தால் மட்டுமே இந்தக்குறிப்பிட்ட நோயையுடையவராகக் கருதப்படுவர்.[7][9][10] மேலும் இந்த நோயுடையவர்கள் சிலர் சிறார்மீதான வன்கொடுமைகள் எதுவுமே செய்யாமலும் இருக்கக்கூடும்.[11]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இதை முறையாகப் பெயரிட்டு குறிப்பிடத் தொடங்கினர். 1980-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதைப்பற்றி நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ஆண்களிலேயே மிகுதியாக அறியப்பட்டிருந்தாலும் இவ்வுளக்கேட்டைக் கொண்டிருக்கும் பெண்களும் உள்ளனர்.[12][13] இப்போதுள்ள கணிப்புகள் பெண்களில் இந்நோயுடையவர்களின் எண்ணிக்கையை குறைவாக மதிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.[14] இந்நோய்க்கான அறுதியான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. எனினும் இந்நோயுள்ளவர்கள் பாலுணர்வு வன்கொடுமைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவோ குறைக்கவோ செய்யும் சிகிச்சை முறைகள் உள்ளன.[6] இந்நோய்க்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.[15] சில ஆய்வுகள் மூளை நரம்புக்கோளாறுகளோடும் பிற உளநோய்களோடும் இந்நோயைத் தொடர்புபடுத்தியிருக்கின்றன.[16] அமெரிக்க ஒன்றியத்தில் கான்சாசு எதிர் என்றிக்கு வழக்கிற்குப் பிறகு பாலியற் குற்றங்களில் ஈடுபட்டதாக அறியப்பட்டு உளநோய்களையுடையோர்மீது வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாடுகளை விதிக்கமுடியும்.[17]

Remove ads

நோய்க்காரணிகள்

சிறா,்பால் ஈர்ப்புக்கான காரணங்கள் முழுமையாக அறியப்படாவிட்டாலும் ஆய்வர்கள் 2002-ஆம் ஆண்டுமுதலாக புள்ளியியல் அடிப்படையில் இந்நோயுடன் தொணர்புள்ள மூளை அமைப்புகளையும் செயற்பாடுகளையும் வெளியிட்டுள்ளனர். குற்றப்பிரிவுச் செயற்பாட்டின்கீழும், அதன்கீழ்வராத வழிகளிலும் நபர்களைப் பற்றி அறிந்து அவர்களையும், பொதுமக்கள் குழுவையும் தனித்தனியாக ஆராய்ந்ததில் பின்வரும் தொடர்புகள் (காரணிகள் எனக்கூறவியலாது) அறியப்பட்டன. குறைந்த அறிவு,[18][19][20] நினைவாற்றல் குறைபாடுகள்,[19] வலதுகைப் பழக்கம் குறைவாக இருத்தல்,[18][19][21][22] ஒத்த அறிவுத்திறன் கொண்டோரைக் காட்டிலும் பள்ளிகளில் குறைவான மதிப்பெண்களைப் பெறுவது,[23] குறைவான உயரம்,[24][25] இளவயதில் மயக்கமடையும் அளவுக்குத் தலையில் காயம் ஏற்பட்டிருப்பதற்கான கூடுதல் வாய்ப்புகள்,[26][27] காந்த அதிர்வலை வரைவில் காணக்கூடிய மூளை அமைப்பு மாறுபாடுகள் முதலியனவை கூடுதலாக இருப்பதற்கும் இந்நோய் அமைந்திருப்பதற்குமான இயைபு அறியப்பட்டுள்ளது.[28][29][30]

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads