சிறிய மணற்பாங்கான பாலைவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறிய மணற்பாங்கான பாலைவனம் (Little Sandy Desert), ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு ஆஸ்திரேலியாவில் 1,11,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பாலைவனம் சிறு மணற்குன்றுகளும், குட்டை மரங்களும், புதர்களும் கொண்டது. 20ஆம் நூற்றாண்டில் இப்பாலைவனத்தின் குறுக்கே கேனியங் ஸ்டாக் பாதை செல்கிறது.[1]



Remove ads
விளக்கம்
சிறிய மணற்பாங்கான பாலைவனம் 110,900 km2 (42,800 sq mi) பரப்பளவு கொண்டது. இதன் வடக்கில் பெரிய மணற்பாங்கான பாலைவனம், கிழக்கில் கிப்சன் பாலைவனம் அமைந்துள்ளது.[2] இதன் வடக்கில் கர்லமில்யி தேசியப் பூங்கா உள்ளது.[3]
புவியியல் & மக்கள்
கடின வெப்பம் கொண்ட இப்பாலைவனம் செம்மண் குன்றுகளும், பாறைச் சமவெளிகளும், புதர்ச் செடிகளும் கொண்டது. இப்பாலைவனத்தின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 250–350 mm (9.8–13.8 அங்) ஆகும். இப்பாலைவனத்தின் மேற்கு எல்லையில் ஜிகலோங் சிற்றூர் உள்ளது. இங்கு மர்ட்டு மக்கள்[4], பரமங்கூர் மற்றும் புன்மு எனும் ஆத்திரேலியப் பழங்குடிகள் வாழ்கின்றனர்.
தாவரங்களும் விலங்குகளும்
இப்பாலைவனத்தின் பெரும்பகுதிகள் சிறு குன்றுகளும், புல்வெளிகளும், புதர்ச் செடிகளும் கொண்டது. மேலும் இப்பாலைவனத்தில் தைல மரங்கள், கோரிம்பியா சிப்பேன்டேலி சிறு மரங்கள் மற்றும் அகாசியா செடிகள் வளர்கிறது. பல்லி மற்றும் பறவையினங்கள் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
