சிறீதர ஆச்சாரியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீதரர் (Śrīdhara, Śrīdharācāryya)[1] (கிபி 870 – 930) இந்தியக் கணிதவியலாளர் மற்றும் சமசுகிருத அறிஞரும், தத்துவாதியும் ஆவார். இவர் தற்கால மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள புர்சூத் கிராமத்தில் சமசுகிருத பண்டிதரான பலதேவ ஆச்சாரியருக்கும்-அச்சோக தேவிக்கும் பிறந்தவர்.
புகழ்பெற்ற படைப்புகள்
- 300 சூத்திரங்கள் கொண்ட திரிசக்திகா அல்லது பட்டிகணிதசாரம்[2] என்ற கணித நூலை இயற்றியுள்ளார்.
குறிப்பிடத்தக்க பணிகள்
சிறீதரரின் குறிப்பிட்டத்தக்க பணிகள்:[3]
- இவர் பூஜ்ஜியத்தை விளக்கினர்: "பூஜ்ஜியத்தை எந்த எண்ணுடன் சேர்த்தால், கூட்டுத்தொகை அதே எண்; எந்த எண்ணிலிருந்து பூஜ்ஜியத்தைக் கழித்தால், எண் மாறாமல் இருக்கும்; பூஜ்ஜியத்தை எந்த எண்ணால் பெருக்கினால், மதிப்பு பூஜ்ஜியமாகும்".
- படிமுறைத் தீர்வுக்கு இருபடி வாய்ப்பட்டை கண்டுபிடித்தவர்களில் முதன்மையானவர்.
- சிறீதரர் சூத்திரம் எனும் இருபடி வாய்பாடு[4]
- இவர் கணித்தையும், இயற்கணிதத்தையும் பிரித்து வகுத்தார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads