சிறீ கூர்மம்
ஆந்திராவிலுள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீ கூர்மம் (Sri Kurmam) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சிறீகாகுளம் அருகே உள்ள ஒரு கிராமமாகும். சிறீ கூர்மம் கிராமம் ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து தென்கிழக்கே 14.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சிறீகாகுளம் மாவட்டத்தில் காரா மண்டலத்தில் உள்ளது. இந்துக் கடவுளான விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கூர்மநாதசுவாமி கோவிலின் நினைவாக இந்த கிராமத்துக்கு இப்பெயரிடப்பட்டது.
Remove ads
நிலவியல்
சிறீ கூர்மம் 18° 16' N அட்சரேகையிலும், 84° 1' E தீர்க்கரேகையிலும், 17 மீட்டர் (59 அடி) உயரத்திலும் அமைந்துள்ளது.[1] இந்த இடம் வங்கக் கடலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
சிறீ கூர்மம் கோவில்

சிறீ கூர்மம் (புனித ஆமை) ஒரு புகழ்பெற்ற யாத்ரீகத் தலமாகும். மேலும் இங்குள்ள ஆலயம் முழு இந்தியாவிலும் தனித்துவமானது. இக்கோயில் அதன் கட்டிடக்கலை அழகுக்காக அறியப்படுகிறது. மேலும், பொ.ச. 1281 தேதியிட்ட கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி பதினொன்றாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. கூர்ம சேத்திரத்தின் புனிதத் தலமானது ஜெகன்னாத புரியில் ஜெகன்னாத தேவரின் செல்வாக்கின் கீழ் ராமானுஜாச்சாரியாரால் மீண்டும் நிறுவப்பட்டது. பின்னர் இக்கோயில் விஜயநகரப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கல்வெட்டுகள் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய வம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரமான கூர்மநாதருக்கு இந்த கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் தோலோத்சவம் முக்கியமான திருவிழாவாகும். இந்த விழாவில் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள்.
கோவிலின் சிறப்பு
- பழமையான கோவிலான இது 9 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அதன் பழமையான வடிவத்தில் கட்டப்பட்டது.
- மதுகேசுவரர், சோமேசுவரர், பீமேசுவரர் கோவில்களின் மும்மூர்த்திகள்.
- விஷ்ணு லிங்கம் இயற்கையாக செதுக்கப்பட்ட முகத்துடன் மதுசா மரத்தின் தண்டால் உருவானது.
- சிவப்புக் கல் சிற்பத்தின் கட்டிடக்கலை பிரம்மாண்டம்.
- அழகான வம்சதாரா நதிக்கரையில் அமைந்துள்ளது.
- கோவில் குளத்திற்கு அருகில் ஆமைகள் சரணாலயமும் உள்ளது
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads