சிறீ லங்காபிமான்ய

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிறீ லங்காபிமான்ய (Sri Lankabhimanya) என்பது, இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் மிகவும் உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும். சிறீ லங்காபிமான்ய என்னும் சொல் சிங்கள மொழியில் "இலங்கையின் பெருமை" என்னும் பொருள் கொண்டது. நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு இந்தக் கௌரவம் அளிக்கப்படுகிறது.[1] இந்த கௌரவத்தை ஒரே காலத்தில் ஐந்து இலங்கையர் மட்டுமே பெற்றிருக்க முடியும். அத்துடன் இக்கௌரவத்தை இறப்புக்குப் பின்னரும் வழங்க முடியும்.[2] வழமையாக இக்கௌரவம் பெற்றவரின் பெயருக்கு முன்னால் சிறீ லங்காபிமான்ய என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர் (எ.கா: சிறீ லங்காபிமான்ய லக்‌ஷ்மன் கதிர்காமர்).

Remove ads

விருது பெற்றோர்

1986 முதல் சிறீ லங்காபிமான்ய கௌரவம் பெற்றோர்:[3]

1986

1993

2005

2007

  • ஏ. டி. ஆரியரத்ன
  • லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் - திரைப்பட இயக்குநர்
  • கிறிஸ்தோபர் வீரமந்திரி - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி
Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads