சிறுவெண்டேரையார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிறுவெண்டேரையார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று இள்ளது. அது புறநானூறு 362. இந்த ஒரு பாடலின் அடிகள்கூடச் சிதைந்துள்ளன.

பெருங்காஞ்சி என்று இதன் துறை குறிப்பிடப்படுகிறது. அரசனைப்போன்ற பெருமகன் ஒருவன் மாண்டது பற்றிக் கூறுவது பெருங்காஞ்சி. பாடல் சிதைந்துள்ளமையால் மாண்டவன் இன்னார் என்று தெரியவில்லை.

பாடல் சொல்லும் செய்தி

போர்க்களத்தில் அவனது மணியாரம் ஞாயிறு போல் மின்னிக்கொண்டு பிறைநிலாப் போலக் கிடக்கிறது. பாசறையில் விசய வெல்கொடி உயர்த்தப்பட்டு, வெற்றிமுரசு முழங்குகிறது. அந்தணாளர் அறம் புரியத் தொடங்குகின்றனர். அவர்களின் கையில் தாரைவார்க்கும் நீர் கடல் வரையில் ஓடுகிறது. இலையில் சோறு வைத்து அவனுக்குப் படைக்கின்றனர். காக்கையும், கூகையும் பட்டப்பகலில் குரல் எழுப்புகின்றன.(இவனது உயிர் உயர்நிலை உலகம் சென்றுவிட்டது) இவனது உடலைப் பறவைகள் தின்றுவிட்டன. இந்த மண்ணில் இனி இவனுக்குச் சிறிது இடங்கூட ஒதுக்கத் தேவையில்லை - இவ்வாறு புலவர் இவனைப் போற்றுகிறார்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads