சிற்றம்பலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிற்றம்பலம் என்கிற பல் மருத்துவர் ஜி.சிற்றம்பலம் என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் சிற்றம்பலம், சட்டமன்ற உறுப்பினர் திருவரங்கம் ...
Remove ads

பிறப்பும் கல்வியும்

திருச்சி திருவரங்கத்தில் பிறந்த சிற்றம்பலம், திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஜப்பான் மருத்துவர் ஒருவரிடத்தில் பல் மருத்துவம் பயின்ற இவர் 1936 ஆம் ஆண்டு டவுன் ஹால் பகுதியில் பல் மருத்துவமனையை துவக்கினார். இதுவே திருச்சியின் முதல் பல் மருத்துவமனையாகும். ஏழை - எளியோருக்கு இலவசமாகவும் - மிக குறைந்த கட்டணத்திலும் சேவை அடிப்படையில் மருத்துவம் வழங்கினார்.

அரசியல்

பொதுப்பணிகள்

  • குடிசை வாழ்வோர் நல சங்கத்தை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்தார்.
  • தோல் பதனிடும் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தை ஏற்படுத்தினார்.
  • திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.
  • திருச்சியின் அர்பன் கோ-ஆபரேட்டிவ் ஸ்டோருக்கு 15 ஆண்டுகள் தலைவராக இருந்தார்.
  • ஸ்ரீரங்கம் மாதர் சங்கத்தை உருவாக்கினார்.
  • பால்வாடிப் பள்ளி ஒன்று தொடங்கி அதற்கு அரசு மானியம் பெற்றுத் தந்தார்.

மருத்துவராக, சமூக சேவகராக, தொழிற்சங்கவாதியாக, அரசியல்வாதியாக பன்முகத் தோற்றத்துடன் செயல்பட்டு வந்தார்.[3]

குடும்பம்

அம்சவல்லி என்ற மனைவியும், ஜெயராமன், கேசவராஜ், என்ற மகன்களும், வனஜா கருணாநிதி என்ற மகளும் உள்ளனர். தந்தையின் வழியில் டாக்டர். கேசவராஜ் கல்விப் பணியிலும் - சமூகப் பணியிலும் ஆர்வமிக்கவர். தற்போது கி. ஆ. பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி தாளாளராகவும், செவிலியர் பள்ளி இயக்குநராகவும் தொண்டாற்றி வருகிறார்.

இறப்பு

டாக்டர் சிற்றம்பலம் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி காலமானார். திம்மராயன் சமுத்திரத்தில் திருவளர்சோலைக்குள் இருக்கும் முதியோர் இல்லத்துக்கு ‘சிற்றம்பலம் அம்சவல்லி இல்லம்’ என்று இவர் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads