சிலிக்கான் கார்பைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிலிக்கான் கார்பைடு (Silicon carbide) (SiC), கார்போரண்டம் (carborundum), எனவும் அழைக்கப்படக்கூடிய ஒரு குறைக்கடத்தி ஆகும். இந்த சேர்மம் சிலிக்கான் மற்றும் கரிமம் ஆகியவற்றைக் கொண்ட SiC என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டையும் உடையதாகும். இது இயற்கையில் அரிதாகக் கிடைக்கும் மாய்சானைட்டில் காணப்படுகிறது. 1893 ஆம் ஆண்டிலிருந்து தொகுப்புமுறையில் அதிக அளவிலான சிலிக்கான் கார்பைடு தயாரிக்கப்படுகிறது. இது அரப்பொருள் அல்லது சிராய்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சிலிக்கான் துகள்கள் வெப்பப்படுத்துதல் மூலம் சிப்பங்கட்டல் செயல்முறைக்குட்படுத்தப்பட்டு மிகக்கடினமான சுட்டாங்கல்களாக இணைக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் சேர்மமானது மிகுந்த கட்டுறுதி தேவைப்படக்கூடிய மகிழ்வுந்துகளின் தடைகள், சுழல்கவ்வி மற்றும் குண்டு துளைக்காத ஆடைகளில் சுட்டாங்கல் தட்டுகள் போன்றவை தயாரிக்கப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. சிலிக்கான் கார்பைடானது, மின்னணுவியலில் ஒளி உமிழ் இருமுனையங்களாகவும், (LEDs) மற்றும் தொடக்க கால வானொலிகளில் உணரிகளாகவும் பயன்படுத்தப்பட்டன. SiC ஆனது அதிக மின்னழுத்தம் அல்லது அதிக வெப்பநிலை அல்லது இரண்டுமே உள்ள நிலையில குறைகடத்தி மின்னணுவியல் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சிலிக்கான் கார்பைடின் பெரிய அளவிலான ஒற்றைப்படிகங்கள் லெல்லி முறையின் மூலமாக வளர்க்கப்படலாம். இவற்றை தொகுப்பு முறை மாய்சனைட் என்றழைக்கப்படும் மதிப்புமிக்க கற்களாக வெட்ட முடியும். அதிக புறப்பரப்பைக் கொண்ட சிலிக்கான் கார்பைடானது தாவரங்களிலிருந்து பெறப்படும் SiO2 விலிருந்து தயாரிக்கப்படலாம்.
Remove ads
கண்டுபிடிப்பு மற்றும் தொடக்க கால தயாரிப்பு
தொடக்க கால சோதனைகள்
முறைப்படியற்ற, குறைவாக அறியப்பட்ட மற்றும் பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தொகுப்பு முறைகளானவை பின்வருபவற்றை உள்ளடக்கியது.
- பொட்டாசியம் புளோரோசிலிகேட்டினை ஒடுக்கம் செய்யும் ஜே. ஜே. பெர்சீலியசின் முறை (1810)
- மணலில் புதைக்கப்பட்ட கார்பன் தண்டில் மின்சாரத்தைப் பாய்ச்சும் சீசர்-மான்சூட் டெஸ்ப்ரெட்ஸின் முறை (1849)
- கிராபைட் புடக்குகை ஒன்றில் எடுக்கப்பட்ட உருகிய வெள்ளியில் சிலிக்காவை கரையச் செய்யும் இராபர்ட் சிட்னி மார்ஸ்டென்னின் முறை (1881)
- சிலிக்கான் மற்றும் சிலிக்கா கலந்த கலவையை ஒரு கிராபைட் புடக்குகையில் வைத்து வெப்பப்படுத்தும் பவுல் ஷுயட்சென்பெர்ஜெரின் முறை (1881)
- சிலிக்கனை எத்திலீனின் சூழலில் வெப்பப்படுத்தும் ஆல்பர்ட் கோல்சனின் முறை(1882)..[5]
அதிக அளவிலான உற்பத்தி

சிலிக்கான் கார்பைடின் பெருமளவு உற்பத்தி முறையானது எட்வர்ட் குட்ரிச் ஆக்சன் என்பவரால் 1890 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.[6] ஆக்சன் செயற்கை வைரங்களைத் தயாரிக்கும் முயற்சியில் களிமண்(அலுமினியம் சிலிக்கேட்டு) மற்றும் துாளாக்கப்பட்ட கோக் (எரிபொருள்) (கரியம்) ஆகியவற்றை ஒரு இரும்புப்பாத்திரத்தில் வெப்பப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது உருவான கார்போரண்டத்தை உருவாக்கிய நீல நிறப் படிகங்களை கார்பன் மற்றும் அலுமினியத்தின் புதிய சேர்மம் (குருந்தத்தையொத்த) என நம்பினார். 1893 ஆம் ஆண்டில், பெர்டினான்ட் ஆன்றி முவாசான் அரிசோனாவில் டையாப்லோ மெடியோரைட்டு பள்ளத்தாக்கில் காணப்படும் பாறை மாதிரிகளை ஆய்விட்டுக் கொண்டிருந்த போது, மிக அரிதாக இயற்கையில் காணப்படும் SiC கனிமத்தைக் கண்டுபிடித்தார். அவரை கௌரவிக்கும் விதமாக அந்தக் கனிமத்திற்கு மாய்சானைட் அல்லது முவாசானைட் எனப் பெயரிடப்பட்டது. முவாசான் SiC ஐ பல வழிமுறைகளில் தொகுப்பு முறையில தயாரித்தார். அவற்றில் சில, உருகிய சிலிக்கனில் கார்பனைக் கரைத்தல், கால்சியம் கார்பைடு மற்றும் சிலிக்கா கலந்த கலவையை உருக்குதல் மற்றும் மின் உலை ஒன்றில் சிலிக்கா மற்றும் கார்பனை ஒடுக்குதல் ஆகியவையாகும்.1893 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் நாள் ஆக்சன் சிலிக்கான் கார்பைடு தயாரிக்கும் முறைக்கு காப்புரிமை பெற்றார். [7] ஆக்சன் சிலிக்கான் கார்பைடு தயாரிக்க இன்றளவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிற மின் உலை ஒன்றை வடிவமைத்தார். கார்போரண்டம் என்ற நிறுவனத்தில் பெருமளவில் சிலிக்கான் கார்பைடைத் தயாரிக்க அது பயன்படுத்தப்படுகிறது. சிலிக்கான் கார்பைடு சிராய்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது. [8]ஆக்சன் கார்பனை உருகிய காரோண்டம் மற்றும் அலுமினாவில் கரைக்க முயற்சித்தார். இதிலிலிருந்து கடினமான கருநீலப் படிகங்கள் உருவாதலைக் கண்டறிந்தார். இந்தப் படிகங்களை இவர் கார்பன் மற்றும் கோரண்டம் இவற்றின் சேர்மமாக இருக்கலாம் என்று கருதினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
