சிலிம்
சிலிம் (Slim) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு துணை மாவட From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிலிம் (மலாய்; ஆங்கிலம்: Slim) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு துணை மாவட்டம். முன்பு பத்தாங் பாடாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2016-ஆம் ஆண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட முவாலிம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டது.
சிலிம் என்பதற்குச் செலிம் (Selim); சிலிம் கிராமம் (Slim Village); கம்போங் சிலிம் (Kampong Slim); சிலின் (Slin) எனும் வேறு பெயர்களும் உள்ளன.[1]
சிலிம் கிராமம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 95 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 108 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. சிலிம் கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ள பெரிய நகரம் தஞ்சோங் மாலிம் ஆகும்.
Remove ads
வரலாறு
மலாயாவில் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியின் போது பிரித்தானிய முதலாளிமார்கள் ரப்பர் தோட்டங்களைத் தோற்றுவித்தார்கள். அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டார்கள்[2] .
1890 - 1900- ஆம் ஆண்டுகளில் சிலிம்; சிலிம் ரீவர்; துரோலாக்; பேராங் போன்ற இடங்களில் பல ரப்பர்த் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிலிம் ரீவர் தோட்டம்; சிலிம் தோட்டம்; லீமா பெலாஸ் தோட்டம்; உலு சிலிம் தோட்டம்; சுங்கை பீல் தோட்டம் என பல ரப்பர்த் தோட்டங்கள்.
காடுகளை வெட்டுதல்; ரப்பர் மரங்களை நடவு செய்தல்; ரப்பர் பால் சேகரித்தல் போன்ற வேலைகளுக்காகத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் மலாயாவின் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியும் செழிப்புற்றது.
சிலிம் ரிவர் ஒரு குட்டி மெட்ராஸ்
1900-ஆம் ஆண்டுகளில் சிலிம் ரீவர், பேராங், பீடோர் போன்ற நகரங்கள் வளர்ச்சிப் பெற்றதற்கு அந்த நகரங்களின் சுற்று வட்டாரத்தில் இருந்த ரப்பர்த் தோட்டங்களும் ஒரு காரணமாக அமைகின்றன. 1940-ஆம் ஆண்டுகளில் தஞ்சோங் மாலிம் நகரத்தைக் காட்டிலும் சிலிம் ரீவர் நகரில் தான் தமிழர்களின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்தன. குட்டி மெட்ராஸ் என்றும் சொல்லப் பட்டது.
அந்தக் காலக் கட்டத்தில், சிலிம் ரீவர் நகரில் தமிழர்கள் மூலைக்கு மூலை ஒட்டுக் கடைகள்; வெற்றிலைப் பாக்குக் கடைகள்; பலசரக்குக் கடைகள் வைத்து இருந்தார்கள். தவிர தமிழர்களின் மளிகைக் கடைகள்; துணிமணிக் கடைகள்; சிற்றுண்டிச் சாலைகளும் இருந்தன.
நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் சிலிம் பகுதியில் இருந்த பல ரப்பர் தோட்டங்கள் காணாமல் போய் விட்டன. அங்கு வாழ்ந்த தமிழர்களும் அவர்களின் வாரிசுகளும் கால வெள்ளத்தில் கரைந்து போய் விட்டார்கள்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads