சிவநாத் பிரசாத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவநாத் பிரசாத்து (Shiv Nath Prasad) ஓர் இந்திய கட்டிடக் கலைஞர் மற்றும் நகர்ப்புற திட்டமிடும் நிபுணர் ஆவார், தன்னுடைய கட்டிடக்கலை வடிவமைப்புகளுக்காக இவர் நன்கு அறியப்பட்டார். [1] இந்தியாவின் லெ கொபூசியே என்று சிவநாத் பிரசாத்து அழைக்கப்பட்டார். அனைத்துலக பாணி கட்டடக் கலைக்குப் புகழ்பெற்றவர் லெ கொபூசியே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]

Remove ads
வாழ்க்கை வரலாறு
சிவநாத் 1922 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் வாரணாசியில் பிறந்தார் [3]
இருவரும் எப்போதாவது ஒன்றாக வேலை செய்திருக்கிறார்களா இல்லையா என்பது முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவரது பணி லெ கொபூசியே என்பவரால் பாதிக்கப்பட்டது. [2] [4] [5]
1965 மற்றும் 1969 க்கு இடையில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்காக மகேந்திர ராசுவுடன் இணைந்து கட்டப்பட்ட புது தில்லி சாணக்யபுரியில் உள்ள அக்பர் உணவு விடுதி இவரது படைப்புகளில் ஒன்றாகும். [6] [7] இது லெ கொபூசியேவின் கட்டமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளது. [2] கலை நிகழ்ச்சிகளுக்கான சிறீ ராம் மையம் 1966-69 ஆம் ஆண்டிலும் திபெத் இல்லம் 1970 ஆம் ஆண்டிலும் கட்டப்பட்டது [8] [2] [9]
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads