சி. வெ. கணேசன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சி. வெ. கணேசன் (C. V. Ganesan) என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல்வாதியும், திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ஆவார்.[1][2]
Remove ads
இளமை
1959ஆம் ஆண்டு சூன் 16ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் கிராமத்தில் வெங்கடன் மற்றும் சின்னம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.[3]
கல்வி
வேலூர் முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தினை முடித்த கணேசன், 1984ஆம் ஆண்டு சென்னை பல்கலைகழத்தில் முதுகலைப் படிப்பும், 1986ஆம் ஆண்டு அண்ணமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்பினை முடித்தார்.[3] திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பினையும் இவர் முடித்துள்ளார்.[4]
அரசியல் பயணம்
சிறுவயது முதலே அரசியல் மீதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை மீதும் பற்று கொண்டிருந்தார் சி. வெ. கணேசன்
முதல்முறை சட்டமன்ற உறுப்பினர்
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி உள்ளார்.
மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்
2004ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலில் தேர்தலில் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கட்சி சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுகிறார். இதன் பின்னர் மு. க. ஸ்டாலின் அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்துறை அமைச்சராக உள்ளார்.
குடும்பம்
இவர் பவானி என்பவரை வாழ்க்கை துணைவியாக ஏற்றார். இந்த இணையருக்கு கவிதா லட்சுமி, கனிமொழி, கலையரசி, சிந்துஜா நிவேசு என்ற நான்கு மகள்களும் வெங்கடேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி பவானி, 9 திசம்பர் 2021 அன்று காலமானார்.[5][6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads