சி. வி. நரசிம்மன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சி. வி. நரசிம்மன் (மே 21, 1915-நவம்பர் 2, 2003[1]) ஐ.நா அவையில் உயர் அலுவலராக (Under secretary general) தொடர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார். இந்தப் பதவி, ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்த உயர்ந்த பதவியாகும்.

வாழ்வும், படிப்பும்

இவர் திருவரங்கத்தில் பிறந்தவர். இவர் தந்தை விஜயராகவாச்சாரி; தாயார் ஜானகி. இவரின் தந்தை மும்பை அஞ்சல் துறையில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சென்னையில் உள்ள பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி பெற்றார். பின்னர், திருச்சியில் உள்ள புனித வளவனார் கல்லூரியிலும், உயர் கல்வியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பயின்றார். 1936ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடிமைப் பணி (ஐ. சி. எஸ்). தேர்வில் இந்திய மாணவர்களிலேயே முதல் மாணவராகத் தேறினார்.

Remove ads

பணிகள்

1936-1950 வரை பிரிக்கப்படாத சென்னை மாகாணத்திலும், 1950-1956 வரை இந்திய மத்திய அரசு பணியிலும் நியமிக்கப்பட்டார். ஐ.நா-வின் அன்றைய பொதுச்செயலாளர் டாக் ஹமாஷெல்ட் இவரைத் தேர்ந்தெடுத்து, ஐ நா-வில் உயர் அலுவலராக நியமித்தார். ஐ. நா செயலாளர்கள் ஊ தாண்ட், வாதீம் ஆகியோரிடமும் பணியாற்றினார்.

ஐ.நா. அவைகுறித்து 3 புத்தகங்கள் எழுதியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை மொழிபெயர்த்து இவர் உருவாக்கிய 'மகாபாரதம்' என்ற நூலைக் கொலம்பியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களின் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. வடமொழியில் நல்ல தேர்ச்சியுடையவர். கர்நாடக இசையிலும் ஈடுபாடு உடையவர் (முசிறி சுப்ரமணிய அய்யரின் மூத்த சீடர்).[2]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads