சீசியம் அயோடைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீசியம் அயோடைடு (Caesium iodide) என்பது சீசியம் மற்றும் அயோடின் ஆகியவற்றின் அயனிச் சேர்மமாகும். இது பெரும்பாலும் ஒளிர்திரை படிமவியல் கருவிகளில் காணப்படும் எக்சு-கதிர் பிம்ப அடர்விக் குழாயின் உள்ளீட்டு பாஸ்பராகப் பயன்படுத்தப்படுகிறது. சீசியம் அயோடைடு ஒளிஎதிர்மின்முனைகள் தீவிர புற ஊதா அலைநீளங்களில் மிகவும் திறன் வாய்ந்தவை ஆகும்.[7]
Remove ads
தொகுப்பு முறை தயாரிப்பும் கட்டமைப்பும்

பருமனான சீசியம் அயோடைடு படிகங்கள் கனசதுர CsCl படிக அமைப்பைக் கொண்டுள்ளன, ஆனால் நானோமீட்டர்-அளவிலான மெல்லிய CsI ஒளிப்படத்தகடுகளின் கட்டமைப்பு வகையானது வினைவேதிப்பொருளைப் பொறுத்து அமைகிறது-இது மைகாவிற்கு CsCl ஆகவும், இலித்தியம் புளோரைடு, சோடியம் புரோமைடு மற்றும் ஆகிய வினைவேதிப் பொருள்களுக்கு சோடியம் குளோரைடாகவும் அமைகிறது. [9]
சீசியம் அயோடைடு அணுச் சங்கிலிகளை இரட்டைச் சுவர் கார்பன் நானோகுழாய்களுக்குள் வளர்க்கலாம். இத்தகைய சங்கிலிகளில் அயோடின் அணுக்கள் சிறிய நிறை கொண்டவை என்றாலும் எலக்ட்ரான் மைக்ரோகிராஃப்களில் Cs அணுக்களை விட பிரகாசமாகத் தோன்றும். இந்த வேறுபாடு Cs அணுக்களுக்கு இடையிலான மின்னூட்ட வேறுபாட்டால் விளக்கப்படுகிறது. இதன் விளைவாக, Cs அணுக்கள் சுவர்களில் ஈர்க்கப்பட்டு, நானோகுழாய் அச்சை நோக்கித் தள்ளப்படும் I அணுக்களை விட வலுவாக அதிர்வுறும்.[8]
Remove ads
பண்புகள்
பயன்பாடுகள்
மினுமினுப்பிகளாக இருக்கும் சீசியம் அயோடைடு படிகங்களின் ஒரு முக்கியமான பயன்பாடு, சோதனைத் துகள் இயற்பியலில் மின்காந்த வெப்ப அளவியல் ஆகும். தூய சீசியம் அயோடைடு என்பது ஒப்பீட்டளவில் குறைந்த ஒளி விளைச்சலைக் கொண்ட ஒரு வேகமான மற்றும் அடர்த்தியான ஒளிரும் பொருள் ஆகும், குளிர்விக்கும் போது இப்பண்பு கணிசமாக அதிகரிக்கிறது. இச்சேர்மத்தின் மிகவும் சிறிய மோலியர் ஆரம் 3.5 செ. மீ. ஆகும்.[10] இது இரண்டு முக்கிய உமிழ்வுக் கூறுகளை வெளிப்படுத்துகிறது. ஒன்று புற ஊதாக் கதிர் பகுதிக்கு அருகில் 310 நானோமீட்டர் அலைநீளத்திலும், ஒன்று 460 நானோமீட்டரிலும் உள்ளது. சீசியம் அயோடைடின் குறைபாடுகள் அதிக வெப்பநிலை சாய்வு மற்றும் லேசான நீர் உறிஞ்சும் திறன் ஆகும்.
ஃபோரியர் உருமாற்ற அகச்சிவப்பு (FTIR) நிறமாலைகளில் சீசியம் அயோடைடு ஒரு கற்றை சிதைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் பொதுவான பொட்டாசியம் புரோமைடு கற்றை சிதைப்பான்களை விட பரந்த பரிமாற்ற வரம்பைக் கொண்டுள்ளது, இது தொலைதூர அகச்சிவப்பு வரம்பில் வேலை செய்கிறது. இருப்பினும், ஒளியியல் தரமான சீசியம் அயோடைடு படிகங்கள் மிகவும் மென்மையாகவும், பிளவுபடுத்தவோ மெருகூட்டவோ கடினமாக உள்ளன. இவை (பொதுவாக ஜெர்மானியம்) உடன் பூச்சு பூசப்பட்டு, வளிமண்டல நீராவிகளுடனான தொடர்புகளைக் குறைக்க ஒரு உலர்த்தும் கருவியில் சேமிக்கப்பட வேண்டும்.[11]
பிம்பம் அடர்வி உள்ளீட்டு பாஸ்பர்களுக்கு கூடுதலாக, சீசியம் அயோடைடு பெரும்பாலும் தட்டையான பலகம் வடிவ எக்சு கதிர் காணிகளில் ஒளிரும் பொருளாகவும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[12]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
