சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735

2022, மார்ச் 21 அன்று மக்கள் சீனக் குடியரசில் விபத்துக்கு உள்ளான விமானம் From Wikipedia, the free encyclopedia

சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735map
Remove ads

சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735 (China Eastern Airlines Flight 5735) சீனாவின் குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்கு இயக்கப்படும் திட்டமிடப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானமாகும். 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 அன்று இவ்விமானம் குவாங்சியில் உள்ள வுயோ மாகாணத்தின் டெங் மாவட்டத்தில் செங்குத்தாக கீழே இறங்கி தரையில் மோதி விபத்திற்கு உள்ளானது.[4] விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்ததாக சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.[2] உயிர் பிழைத்தவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.[5]

விரைவான உண்மைகள் Incident சுருக்கம், நாள் ...
Thumb
5735 விமானத்தின் பாதை
Remove ads

விமானம்

குன்மிங் சாங்சுய் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து குவாங்சூ பையுன் பன்னாட்டு விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி 13:15 மணிக்கு விமானம் புறப்பட்டது. 15:05 மணிக்கு விமானம் தரையிறங்க வேண்டும்.[6]

விபத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு, உயோ வானிலை சேவைகள் நிறுவனம் வலுவான வெப்பச்சலன காற்றுக்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.[7]

Thumb
விபத்தான வானூர்தியின் பாதை

பொதுவாக வானூர்தி விரைவு எடுத்து பின் திடீரென்று குப்புற பாய்வது நடக்காது என்று கூறப்படுகிறது. வானூர்தியின் பின்புறத்தில் உள்ள வானூர்தியை நிலைநிறுத்தும் கிடைமட்ட வால் சரியாக வேலை செய்யாததாலோ நாச வேலை காரணமாகவோ விபத்து நடந்திருக்கலாம் என இருக்கலாம் ஊகிக்கப்படுகிறது. அனைத்து எந்திரங்களும் வேலை செய்யாவிட்டாலும் வானூர்தி காற்றில் வழுவி பறப்பது போல வடிவமைக்கப்படுகிறதே அன்றி குப்புற பாய்வது போன்று வடிவமைக்கப்படுவதில்லை என்று முனைவர் பிரௌன் கூறினார்.[8] விபத்துக்குள்ளான போயிங் 737NG அதாவது 737 அடுத்த தலைமுறை வானூர்தி மற்ற வானூர்திகளை விட பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. 1997இல் இருந்து 7,000 வானூர்திகள் விற்பனையானதில் 11 வானூர்திகளே விபத்துத்தை சந்தித்துள்ளன. விபத்துக்குள்ளான வானூர்தி தன் முதல் பறப்பை யூன் 2015இல் சீனாவில் மேற்கொண்டது. வானூர்தி 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது பின் 2.20 மணிக்கு பின் திடீரென பெருமளவு உயரத்தை இழந்துள்ளது, தொடர்பு துண்டிக்கப்படும் முன் உடனடியாக இழந்த உயரத்தில் 1,000 அடியை மீட்டு மேலெலுந்து பின் மீண்டும் குப்புற பாய்ந்துள்ளது. இரண்டு நிமிடத்திற்குள் 25,000 அடிக்கும் அதிகமான உயரத்தை இழந்துள்ளது.[9]

Thumb
விபத்தான சீன வானூர்தி பறப்பு உயரம்
Remove ads

கருப்புப் பெட்டி

ஆறு நாள் தேடலுக்குப் பின் ஐந்து அடி ஆழத்தில் புதைந்திருந்த கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஆராய அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க வல்லுநர்கள் குழு வாசிங்டன் டி.சி அருகேயுள்ள சோதனைச்சாலையில் இதை ஆராய உள்ளார்கள்.[10] விபத்து நடந்த மலைப்பகுதியில் வானூர்தி மோதியதில் 20 அடி ஆழ பள்ளம் உருவாகியுள்ளது.

இந்த விபத்து வானோடிகள் அறையிலிருந்த சிலரால் வேண்டுமென்றே செய்யப்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். [11] [12]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads