சீனிவாசராகவன் வெங்கடராகவன்
இந்தியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீனிவாசராகவன் வெங்கடராகவன் ⓘ (செல்லமாக வெங்கட் பிறப்பு 21 ஏப்ரல் 1945)என்கிற எஸ். வெங்கட்ராகவன் ஓர் முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர். அவர் இங்கிலாந்து|இங்கிலாந்தின் கௌன்டி துடுப்பாட்டங்களில் டெர்பிசையர் கௌன்டிக்காக விளையாடினார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியவர் பின்னர் ஓய்வுக்குப் பிறகு பன்னாட்டு துடுப்பாட்ட பேரவையின் தேர்வு நடுவர்கள் பட்டியலில் இடம்பெற்ற துடுப்பாட்ட நடுவராகவும் பணியாற்றி உள்ளார். மிக நெடுநாள் விளையாடிய இந்தியத் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையும் இவருக்குண்டு.[1]
Remove ads
ஆட்ட வரலாறு
மேற்கிந்தியத்தீவு அணிக்கெதிரான போட்டியில் (1975) பேடி,கவாஸ்கர் காயம்பட்டதால் அணித்தலைவர் பதவியை ஏற்றவர். சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மட்டுமல்ல, 'கல்லி' பகுதியில் நின்று துடுப்பாடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். துடுப்பாட்டத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர்.1975,79 களில் உலகக் கோப்பை இந்திய அணிக்குத் தலைமை ஏற்றவர். சர்ச்சையின்றித் தீர்ப்பு வழங்கி முதல் தர நடுவராக திகழ்பவர்.
குடும்பம்
இவரது மகன்களான விஜய், வினய் இருவரும் டென்னிஸ் வீரர்கள்.
விருதுகள்
- அர்ஜுணா விருது
- மிகச்சிறந்த நடுவர்க்கான ரோட்டரி விருது[2]
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads