சுகோத்தாய் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

சுகோத்தாய் இராச்சியம்
Remove ads

சுகோத்தாய் இராச்சியம் (ஆங்கிலம்: Sukhothai Kingdom, தாய்: ราชอาณาจักรสุโขทัย) என்பது கி.பி 1238-ஆம் ஆண்டு முதல் 1438-ஆம் ஆண்டு வரையில் தாய்லாந்தின் வடமத்தியில் சுகோத்தாய் நகரையும் அதன் அருகில் இருந்த பகுதிகளையும் உள்ளடக்கி இருந்த ஓர் இராச்சியம் ஆகும்.

விரைவான உண்மைகள் சுகோத்தாய்இராச்சியம்Kingdom of Sukhothaiอาณาจักรสุโขทัย, தலைநகரம் ...

இந்த இராச்சியம் கி.பி.678-இல் பிரயா பலிராஜ் (Phraya Paliraj) என்பவரால் நிறுவப்பட்டது என்றும் அவரின் பூர்வீகம் இலாவோ இராச்சியம் என்றும் தாய்லாந்து காலச் சுவடுகள் (Northern Thai Chronicles) பதிவு செய்துள்ளன.[1]

1438-ஆம் ஆண்டு வரை ஒரு சுதந்திர அரசாக இருந்தது. அதன் அரசரான போரோம்மாபன் (Borommapan) எனும் மகா தம்மராச்சா IV (Maha Thammaracha IV) இறந்த பிறகு, அதன் அண்டை இராச்சியமான அயூத்தியாஇராச்சியத்தின் ஆளுமையின் கீழ் வந்தது.

Remove ads

பொது

இந்தச் சுக்கோத்தாய் இராச்சியம், கெமர் மற்றும் லாவோ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது, கெமர் மக்கள், சுக்கோத்தாய் நகரத்தில் பல்வேறு நினைவுச் சின்னங்களைக் கட்டினார்கள். அவற்றுள் பல இன்னும் அங்கு உள்ளன.[2]

இதன் தலைநகரம், தற்போதைய சுகோத்தாய் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் இருந்தது. தற்போது அந்த நகர்ப்பகுதி சிதைந்த நிலையில் உள்ளது. சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா (Sukhothai Historical Park) என்ற பெயரில் யுனெஸ்கோ இதனை உலகப் பாரம்பரியக் களமாக (World Heritage Site) அறிவித்துள்ளது.

Thumb
சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா
— அரச மாளிகை —
சுகோத்தாய் வம்சம்
நிறுவிய ஆண்டு: 1238
முன்னர்
லாவோ இராச்சியம்
சுகோத்தாய் இராச்சியத்தின்
அரச வம்சம்

1238-1583
பின்னர்
Remove ads

மேற்கோள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads