சுடோமு யாமகுச்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுடோமு யாமகுச்சி (Tsutomu Yamaguchi, த்சுடோமு யாமகுச்சி, மார்ச் 16, 1916 – சனவரி 4, 2010) என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார். ஏறத்தாழ 160 பேர் இரண்டு குண்டு வீச்சிலும் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்திருந்தாலும், சப்பானிய அரசால் அதிகாரப்பூர்வமாக இரு குண்டு வீச்சிலும் தப்பியவர் என்று இவர் மட்டுமே அறிவிக்கப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் சுடோமு யாமகுச்சிTsutomu Yamaguchi山口 彊, பிறப்பு ...

நாகசாக்கியில் வசித்து வந்த யாமகுச்சி 1945 ஆகத்து 6 இல் மிட்சுபிசி நிறுவனத்திற்காகப் பணி நிமித்தம் இரோசிமா சென்றிருந்த போது காலை 08:15 மணிக்கு அந்நகரம் மீது அணுக்குண்டு போடப்பட்டு காயமடைந்தார். அடுத்த நாள் நாகசாக்கி வந்த அவர் காயங்களுக்கிடையேயும் ஆகத்து 9 இல் பணிக்குச் சென்றார். அந்நாளிலேயே நாகசாக்கி மீது இரண்டாவது அணுக்குண்டு வீசப்பட்டது.

பின்னாளில் இவர் தனது அனுபவங்களை தொகுத்து (Ikasareteiru inochi) என்ற புத்தகத்தை எழுதினார்.

ஜனவரி 4, 2010 அன்று தனது 93வது அகவையில் வயிற்று புற்றுநோயால் இவர் இறந்தார்.[2][3][4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads