சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி (Chundikuli Girls' College) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள தனியார் பெண்கள் பாடசாலை ஆகும். இது பிரித்தானிய அங்கிலிக்கன் திருச்சபையால் நிறுவப்பட்டது[1].
Remove ads
வரலாறு
சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியானது 1896 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதி அங்கிலிக்கன் தேவாலய திருச்சபை சமூகத்தைச் சேர்ந்த மேரி காட்டர் அம்மையால் நிறுவப்பட்டது. பாடசாலை நிறுவப்பட்ட காலத்தில் 9 மாணவர்களையே கொண்டிருந்தாலும் 1896 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாணவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. 1900 ஆம் ஆண்டு சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியானது மானியங்கள் உதவியில் இயங்கும் பாடசாலை ஆகியது. 1915 ஆம் ஆண்டு பாடசாலை அதிபராக கடமையாற்றிய சோபியா லூசிண்டாவினால் ஸ்தாபிக்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டு தமிழ் முதல் மொழியாக கற்றுத்தரப்பட்டது. அடுத்த வருடம் பாடசாலையானது முற்றாக ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டாம் நிலை பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. இலங்கை வட பகுதியின் முதல் இரண்டாம் நிலை பாடசாலை எனும் பெருமை சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியையே சாரும்[2].
சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியானது 1896 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6 ஆம் திகதி தற்போதைய இடத்திற்கு இடமாற்றப்பட்டது. பாடசாலையில் 1945 ஆம் ஆண்டு இலவசக்கல்வித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியானது முதலாம் நிலைப் பாடசாலையாக அறிவிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பெரும்பாலான தனியார் பாடசாலைகள் அரசாங்கத்தினால் உள்வாங்கப்பட்டிருந்தன. எனினும் சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியானது தனியார் பாடசாலையாகவே தொடர்ந்து செயற்பட்டது. அனைத்து தனியார் பாடசாலைகள் போலவே நிதி மற்றும் மாதக்கட்டணங்கள் அளவிடப்படுகிறது.
Remove ads
கண்ணோட்டம்
சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியானது யாழ்ப்பாணத்தின் தென்-கிழக்குப் புறநகர் பகுதியில் பிரதான வீதியில் அமைந்துள்ளது. இப்பாடசாலையானது இலங்கையின் தமிழ்ப்பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் பாடசாலையாகவே ஸ்தாபிக்கப்பட்டது. பாடசாலையானது கல்வி மட்டத்தின் அடிப்படையில் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலைப்பள்ளியானது தரம் 1 இல் இருந்து தரம் 5 வரையான சிறப்பு கல்வியையும் இடை நிலைப்பள்ளியானது தரம் 6 இல் இருந்து தரம் 8 வரையான சிறப்பு கல்வியையும் உயர்நிலைப்பளியானது தரம் 9 இல் இருந்து தரம் 12 வரையான சிறப்பு கல்வியையும் வழங்குகிறது.
Remove ads
இல்லங்கள்
பாடசாலையின் இல்லங்களின் அமைப்பானது 1926 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1926 ஆம் ஆண்டு Tennys, Nightingale மற்றும் Shakespeare ஆகிய இல்லங்கள் காணப்பட்டாலும் அவை அடுத்த ஆண்டே பாடசாலையின் முன்னாள் அதிபர்களின் பெயர்களான Carter, Good Child, மற்றும் Page என பெயர் மாற்றபட்டது.[2]
அதிபர்கள்
- 2006 - துஷயந்தி துஷீதரன்[3]
- 1996 - 2005 டி ராஜரட்ணம்
- 1983 - எல் பி ஜெயவீரசிங்கம்
- 1961 - 1983 ஜி ஈ எஸ் செல்லையா
- 1951 -1961 சாரா டி மத்தாய்
- 1941 - 1950 ஈ எம் தில்லையம்பலம்[4]
- 1932 - 1941 - நோர்த்வே[4]
- 1931 - 1932 மாட் வில்லிஸ்
- 1904 - 1931 சோபியா லூசிண்டா பக்கம்
- 1899-904 - ஏமி குட்சைல்ட்[4]
- 1896 - மேரி கார்ட்டர்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads