சுண்ணாம்பு கால்வாய்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுண்ணாம்பு கால்வாய் (Sunnambu Canal) என்பது ஈரோடு நகரின் வடக்குப் பகுதியில் உள்ள நீர் வரத்துக் கால்வாய் ஆகும். முன்பு இக்கால்வாயானது இது பாயும் வழியில் உள்ள சுற்றுப்புற நிலங்களுக்கெல்லாம் பாசனத்திற்கான நீரை வழங்கிய இயற்கையான கால்வாயாகக் கொண்டாடப்பட்டுள்ளது. காவேரி ஆற்றின் சிறு துணை நதிகளுள் ஒன்றாக இருந்தும், சிற்றோடைகளிலிருந்துது பெறும் மழை நீர் மற்றும் கீழ் பவானி திட்டக் கால்வாயிலிருந்து கிடைக்கும் கசிவு நீர் ஆகியவற்றிலிருந்து தனக்கான நீர் மூலத்தைப் பெறுகிறது.

இந்தக் கால்வாய் சித்தோடுக்கு அருகில் தொடங்கி காவேரியோடு இணைந்து பயணித்து ஆர்.என். புதூருக்கு அருகில் முடிகிறது. இக்கால்வாயின் நீளம் 7 கிலோமீட்டர் (4.3 மைல்கள்) ஆகும். இந்தக் கால்வாயானது சொட்டையம்பாளையம் மற்றும் சூரியம்பாளையம் ஆகிய பகுதிகளைக் கடந்து செல்கிறது.

Remove ads

சூழலியல் பிரச்சனைகள்

சமீபத்திய நாட்களில், எண்ணற்ற தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், துணை ஆலைகள் மற்றும் வெளுக்கும் அலகுகள் ஈரோடு மாநகராட்சியின் இந்தப் பகுதியில் நிறுவப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக தொழிற்மயமாக்கல் வீதமானது இந்தக் கால்வாய்க்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தோல் பதனிடும் ஆலைகள், சாயமேற்றும் மற்றும் வெளுக்கும் நிறுவனங்களால் வெளியிடப்படும் பதப்படுத்தப்படாத அல்லது சுத்திகரிக்கப்படாத நீரியற் கழிவுகள் இந்தக் கால்வாயின் நீரினை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றியதோடு பயன்படுத்துவதற்கு ஏதுவற்ற தன்மையை உருவாக்கி விட்டது. மேலும் பல எண்ணற்ற தீய விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.[1] நோர்வே சார்ந்த நிறுவனங்களின் உதவியுடன் சில உயிரிய மற்றும் இயந்திரவியல் சுத்திகரிப்பு முறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்த கால்வாயின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசும், குடிமக்கள் நலன் சார்ந்த அமைப்புகளோடு சேர்ந்து இந்தக் கால்வாயில் ஏற்பட்ட சூழலியல் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.[2]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads