சுனில் கங்கோபாத்யாயா

சாகித்திய அகாதமி விருது பெற்ற வங்காள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

சுனில் கங்கோபாத்யாயா
Remove ads

சுனில் கங்கோபாத்யாயா (Sunil Gangopadhyay) அல்லது சுனில் கங்குலி (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায় Shunil Gônggopaddhae, செப்டம்பர் 7, 1934  அக்டோபர் 23, 2012[1][2][3]) ஓர் இந்திய வங்காள மொழிக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.[4] தற்போது வங்காள தேசத்தில் உள்ள ஃபரீத்பூரில் பிறந்த கங்கோபாத்யாயா வங்காள இலக்கியத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றவர். 1953இல் தம்முடைய சில நண்பர்களுடன் கிருத்திபாஸ் என்ற வங்காள கவிதை இதழ் ஒன்றை துவக்கினார். பின்னர் பல்வேறு பிரசுரங்களுக்கு தமது ஆக்கங்களை எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் சுனில் கங்கோத்யாயா, பிறப்பு ...

காகாபாபு என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி பல புதினங்களை தொடர்ந்து எழுதினார்; இத்தொடர்கள் சிறுவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அந்த நாட்கள் (செய் சமோய்) என்ற தமது புதினத்திற்கு 1985ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[5] நீல் லோகித், சனாதன் பதக், மற்றும் நீல் உபாத்யாயா என்ற புனைபெயர்களில் அவர் எழுதி வந்தார்.[1]

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads