சுனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுனை என்பது இயற்கை நீர் நிலைகளுள் ஒன்று. இது பொதுவாக மலைகளில் காணப்படும் நீர்நிலை வகையாகும். இது மலைகளின் கண் தோன்றும் ஊற்று நீர் ஆகும். இது சிறு அருவி போல காணப்படும். சிறு குளம் போலத் தேங்கியும் காணப்படும். சுனைகள் மலைப்பகுதியில் வாழ்ந்த விலங்கினங்கட்கு நீராதாரமாக இச்சுனைகள் விளங்கி வந்துள்ளன. அகநானூற்றில் களிற்றுயானை நிரையில் 8 இடங்களில் சுனைகள் பற்றிய செய்திகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் அவை வளமுணர்த்தவும் வறுமையுணர்த்தவும் கூறப்பட்டுள்ளன. மலைநாட்டு மக்கள் அவற்றை குடிநீருக்காகப் பயன்படுத்தியதாக அகநானூற்றில் குறிப்பு இல்லை.
Remove ads
அமைவிடம்
சுனைகள் குறிஞ்சி நிலத்து நீர்நிலைகளுள் ஒன்றாகும். இவை மலைகளில் உருவாகும் சிறிய நீர்நிலை ஆகும். இதனை,
- "பாறை நெடுஞ்சுனை" [1]
- "பூவமன் றன்று சுனையுமன்று"[2]
- "வான்கண் அற்றஅவன் மலையே வானத்து மீன்கண் அற்றஅவன் சுனையே ஆங்கு"[3]
- "தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை" [4]
எனவும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
சுனை நீரின் தன்மை
சுனை நீர் உண்ணத் தகுந்த நீர் ஆகும். இது சுவை மிக்க நீராக இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளது. "இன்தீம் பைஞ்சுனை" (59) என்றும் "தீம்பெரும் பைஞ்சுனை" (78) என்றும் குறிக்கப்படுகின்றது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads