சுரங்கங்கள் அமைச்சகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுரங்க அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகஙகளில் ஒன்றாகும். இந்தியாவில் சுரங்கங்கள் தொடர்பான சட்டங்களை உருவாக்குவதற்கும், நிர்வாகத்துக்கும் முதன்மை அமைப்பாக இந்த அமைச்சகம் செயல்படுகிறது. அமைச்சகத்தின் கேபினெட்[தெளிவுபடுத்துக] அமைச்சர் பிரகலாத ஜோஷி சூன் 2019 முதல் பணியாற்றி வருகிறார்.[2]
Remove ads
செயல்பாடுகள்
சுரங்கம் மற்றும் உலோகவியலில் பயன்படுத்தப்படும் கனிமங்களை (இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியம் தவிர) ஆய்வு செய்வதற்கும் சுரங்க அமைச்சகம் பொறுப்பாகும். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 (எம்எம்டிஆர் சட்டம்) நிர்வாகத்திற்காக அலுமினியம், தாமிரம், துத்தநாகம், ஈயம், தங்கம், நிக்கல் போன்ற இரும்பு அல்லாத உலோகங்களையும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி போன்றவைகளை இது சுரங்கங்களில் தேடுகிறது. ஒரு தலைமைஅலுவலகம், ஒரு துணை அலுவலகம், மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), மூன்று தன்னாட்சி அமைப்புகள் மற்றும் சுரங்க அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் செயல்படும் கூடுதல் முகமைகள் உள்ளது.
Remove ads
இணைக்கப்பட்ட அலுவலகங்கள்
- இந்திய புவியியல் ஆய்வு மையம், கொல்கத்தா
- இந்தியச் சுரங்க பணியகம், நாக்பூர்
பொதுத்துறை நிறுவனங்கள்
- தேசிய அலுமினிய நிறுவனம் (நால்கோ), புவனேஸ்வர்
- இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL), கொல்கத்தா
- கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் (MECL), நாக்பூர்
தன்னாட்சி அமைப்புகள்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads