திரிகுணாதீதானந்தர்

From Wikipedia, the free encyclopedia

திரிகுணாதீதானந்தர்
Remove ads

சுவாமி திரிகுணாதீதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் சாரதா பிரசன்ன மித்ரா.இவரது தந்தை சிவகிருஷ்ண மித்ரா.இவரது ஆசிரியர் அமுதமொழிகள் நூலை உலகிற்குத் தந்த ராமகிருஷ்ண பக்தர் ’ம’.அவர் சாரதாவை ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க 1884 டிசம்பர் 27 ஆம் தேதி அழைத்துச் சென்றார்.

விரைவான உண்மைகள் சுவாமி திரிகுணாதீதானந்தர், பிறப்பு ...

அமெரிக்காவில் வேதாந்தப் பணிகளை மேற்கொண்ட சுவாமி துரியானந்தரின் உடல்நிலைக் குறைவால்,இவர் சுவாமி விவேகானந்தரால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்காவில் பல்வேறு சேவைகள் செய்த இவர்,மனநிலை பாதிக்கப்பட்டிருந்த தமது முன்னாள் மாணவனின் வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்து பின்னர் இறந்தார். காயமடைந்த சுவாமி திரிகுணாதீதானந்தரை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் போது மரணவேதனையிலும்,வெடிகுண்டு வீசி அதற்குத் தானும் பலியான தமது முன்னாள் மாணவனான லூயிஸ்க்காக கலங்கி"லூயிஸ் எங்கே! அவன் ஓர் அப்பாவி" என்று கூறிக்கொண்டே சென்றார்.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads