சு. சமுத்திரம்

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

சு. சமுத்திரம்
Remove ads

சு. சமுத்திரம் (Su. Samuthiram, 1941 – ஏப்ரல் 1, 2003) ஒரு தமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

விரைவான உண்மைகள் சு. சமுத்திரம், பிறப்பு ...

வாழ்க்கைக் குறிப்பு

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்.[1][2][3][4][5]

தமிழ்நாட்டு அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் அமைத்த தமிழிலக்கிய சங்கப்பலகையின் குறள்பீடம் என்ற அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராகப் பொறுப்புவகித்தார்.[6] 2001ஆம் ஆண்டு மே மாதம் அப்பதவியைத் துறந்தார்.[7]

Remove ads

விருதுகள்

எழுதிய புத்தகங்கள்

(முழுமையானதல்ல)

  1. அவளுக்காக (ராணிமுத்து)
  2. இல்லந்தோறும் இதயங்கள்
  3. ஊருக்குள் ஒரு புரட்சி
  4. என் பார்வையில் கலைஞர்
  5. ஒத்தைவீடு
  6. ஒரு கோட்டுக்கு வெளியே
  7. கடித உறவுகள்
  8. சத்திய ஆவேசம்
  9. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
  10. சாமியாடிகள்
  11. சோற்றுப்பட்டாளம்
  12. தராசு
  13. தாய்மைக்கு வறட்சி இல்லை
  14. பூ நாகம்
  15. மண்சுமை
  16. மூட்டம்
  17. வட்டத்தை மீறி
  18. வளர்ப்பு மகள்
  19. வெளிச்சத்தை நோக்கி
  20. வாடா மல்லி
  21. வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்றது)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads