சு. தமிழ்ச்செல்வி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சு. தமிழ்ச்செல்வி (பிறப்பு: மே 4, 1971) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரின் முதல் படைப்பான 'மாணிக்கம்' சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றது.[1]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாழ்க்கை
தமிழ்ச்செல்வி திருவாரூர் மாவட்டத்தில் கற்பகநாதர்குளத்தில் 1971ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தை சுப்பிரமணி ஓமியோபதி மருத்துவராகப் பணியாற்றியவர். தாயார் முத்துலட்சுமி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருத்துறைப்பூண்டியில் தனது ஆசிரியர் பயிற்சியை முடித்து கற்பகநாதர் குளத்தில் தான் பயின்ற பள்ளியிலேயே ஆறு வருடம் ஆசிரியராகப் பணியாற்றினார். அஞ்சல் வழியில் பி. லிட்., முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். இவர் எழுத்தாளர் கரிகாலனை மணம் செய்து கொண்டார். தற்போது கடலுார் மாவட்டம் கோ. ஆதனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியையாகப் பணிபுரிகிறார்.[2]
Remove ads
எழுத்துப் பணி
நாவல்கள்
- மாணிக்கம் (2002)
- அளம்( 2002)
- கீதாரி( 2003)
- கற்றாழை ( 2005)
- ஆறுகாட்டுத்துறை(2006)
- கண்ணகி (2008)
- பொன்னாச்சரம் ( 2010)
சிறுகதைகள்
- சாமுண்டி (2006)
- சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் ( 2010)
பரிசுகளும் சிறப்புகளும்
- தமிழ் வளர்ச்சித் துறை, சிறந்த புதினம் ("மாணிக்கம்") விருது, 2002
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் விருது, புதினம்- "கற்றாழை"
- கலைஞர் பொற்கிழி விருது (தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்)
- விளக்கு விருது 2022
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads