சு. திருநாவுக்கரசர்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சு. திருநாவுக்கரசர் (Su. Thirunavukkarasar, பிறப்பு: மே 07, 1949) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.[4]
1977[5] முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர்.[6] அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.[7] ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.[8][9]
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருச்சி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10][11]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads