சூரியகாந்த வியாசு

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சூரியகாந்த வியாசு (Suryakanta Vyas)(23 பிப்ரவரி 1938 - 25 செப்டம்பர் 2024) என்பவர் பாசத்துடன் ஜிஜி என்று அழைக்கப்பட்டவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தானில் உள்ள புஷ்கர்ண பிராமணச் சமூகத்தில் ஒரு நபராகவும் இருந்தார். இவர் இராசத்தான் சட்டமன்றத்தில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். 2008ஆம் ஆண்டு சூர்சாகர் சட்டமன்றத் தொகுதிக்கு மாறுவதற்கு முன்பு ஜோத்பூர் தொகுதியிலிருந்து மூன்று முறை போட்டியிட்டார்.[1]

விரைவான உண்மைகள் சூரியகாந்த வியாசு, உறுப்பினர் இராசத்தான் சட்டப் பேரவை ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

வியாசு இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக ஆறு முறை பணியாற்றியுள்ளார். இவரது முதல் மூன்று பதவிக்காலத்தில், 1990, 1993 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் ஜோத்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2008, 2013 மற்றும் 2018 இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்களில் சூர்சாகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

இறப்பு

வியாசு 25 செப்டம்பர் 2024 அன்று தனது 86 வயதில் இறந்தார்.[3][4]

விருதுகள்

சமூகத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்புகளுக்காக வியாசு பலமுறை கௌரவிக்கப்பட்டார். ஜோத்பூர் தொகுதியிலும் இராசத்தான் சட்டமன்றத்திலும் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக இவர் இருந்தார். தனது சொற்பொழிவுத் திறமைக்குப் பெயர் பெற்ற இவர், 2012ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்தில் சிறந்த உறுப்பினராகவும் அங்கீகரிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads