சூரிய நடுக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரிய நடுக்கம்

பூமியின் மேலோட்டுக்குக் கீழே உருகிய குழம்புநிலையில் உள்ள நிலம் எந்நேரமும் புயலாக சுழன்று கொண்டிருப்பதால் அதன் தாக்கம் மேலே நிலப் புறவோடுகள் நகர்ந்து மோதுவதாலும் பிற காரணங்களாலும் நிலநடுக்கமாக வெளிப்படுகிறது. வளிமங்களால்[1] ஆன கதிரவனில் கெட்டியான ஓடுகள் இல்லாவிட்டாலும்கூட பூமியின் நிலநடுக்க அலைகளை அலசுவது போன்றே சூரியனின் புற அமைப்புப் பகுதியில் எழும் அலைகளை அலசுவதால் உள்ளே நிகழ்வதையும் நன்றாக விளக்குகின்றது என்று அறிந்திருக்கின்றார்கள்[2]. இவ்வகையான விளைவுகளால் கதிரவமேல் பரப்பில் சீற்றத்துடன் பாய்ந்து வீசும் பிழம்பு (Solar Flares) களாக இவை வெளிப்படுகிறன.
பூமியின் நிலநடுக்க அலைகளைப் போலவே சூரியனின் மேல்புறத்திலும் அதிர்வுகள் ஏற்படுகின்றன. " 5 மணித்துளி அதிர்வு" என்று அழைக்கப்படும் ( 5 minute oscillation) அதிர்வில் 3 மில்லி எர்ட்ஸ் (millihertz) அதிர்வு ஏற்படும். இது கோயில் கண்டாமணி அடித்து ஓய்ந்தும் தொடர்ந்து கேட்கும் ரீங்காரம் போன்றிருக்கும்.

.
சோஃகோ (SOHO) எனப்படும் கதிரவனும் அதன் அணியப் புறமண்டலத்தின் கூர்நோட்டகம், (சோலார் அண்ட் எலியோசுஃவியர், Solar and Helioshpere Observatory SOHO) என்னும் NASA-ESA ஆய்வுக்கூடம் இந்த அதிர்வுகளைக் கவனித்துக் கொண்டு வருகிறது. அதிர்வுகள் சூரியனில் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவதால் அதன் செயல்பாடுகளை அறிய முடியும் என்பது உள்ளக்கிடக்கை.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads