செங்குந்தர் பிள்ளைத்தமிழ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செங்குந்தர் பிள்ளைத்தமிழ், சிறீ ஞானப்பிரகாச முனிவரால் எழுதப்பட்ட நூலாகும். இது செங்குந்தர் இனத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி எழுதப்பட்ட பிள்ளைத்தமிழ் வகை பிரபந்த நூலாகும். செங்குந்தர்களுடைய வீரம், நியாயம், தியாகம் முதலிய சிறப்புகளை இந்நூல் கூறுகிறது.
உள்ளடக்கம்
ஆண்பாற் பிள்ளைக்கவியாகப் பத்து பருவங்களை உடையது. வீரவாகு தேவர் உட்பட ஒன்பதின்மர், சுப்பிரமணியக் கடவுள் மரபில் வந்தவர்கள் என்னும் செய்தியைத் தெரிவிக்கின்றது. இதனை,
“ | மயில் வாகனத்தோன் துணையாக வந்தோர் தாலோ தாலேலோ | ” |
என்னும் அடியால் அறியலாம். அன்றியும்,
“ | சங்குத்து வயல் மேவு செங்குந்த வளநாடர் சப்பாணி கொட்டி யருளே | ” |
எனக் கூறப்படுதலால், செங்குந்த நாடு என்று ஒரு நாடு இருந்ததென்பதும், செங்குந்தர் அந்நாட்டை ஆண்டனர் என்பதும் தெரிய வருகிறது.
Remove ads
உசாத்துணை
- காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் எழுதிய செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, 1926.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads