செஞ்சி என். இராமச்சந்திரன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

செஞ்சி ந. இராமச்சந்திரன் (Gingee N. Ramachandran) (பிறப்பு: சூன் 3, 1944) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

விரைவான உண்மைகள் செஞ்சி என். இராமச்சந்திரன், இந்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சர் ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

இராமச்சந்திரம் தென்னாற்காடு மாவட்டம் செஞ்சு வட்டம் அவியூரினைச் சார்ந்தவர். இவர் இளங்கலை பட்டத்தினை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டப்படிப்பினை சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

அரசியல்

1965 இந்தி எதிர்ப்பு போராட்டக்காலத்தில், தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் நடத்திவந்த தென்மொழி இதன் மூலமாக உணர்வேற்றப்பட்ட இராமச்சந்திரன் இந்திஎதிர்ப்பு போராட்டத்தில் கணேசமூர்த்தி உள்ளிட்ட நண்பர்களோடு சிறப்பாக களமாடினார். தமிழக சட்டப் பேரவைக்கு 1977, 1980, மற்றும் 1989ஆம்[1] ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். பின்னர் வைகோ திமுகவிலிருந்து விலகிய போது இவரும் திமுகவிலிருந்து விலகினார். இவர் 14 வது மக்களவை உறுப்பினராகவும், இந்திய அரசின் நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாட்டின், வந்தவாசி தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2][3][4][5][6] இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (MDMK) அரசியல் கட்சியில் உறுப்பினராக உள்ளார். திசம்பர் மாதம் 6 ஆம் தேதி, மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான வைகோ கட்சியின் செயல் தலைவரான எல். கணேசன் மற்றும் துணை பொதுச் செயலாளர் செஞ்சி என். இராமச்சந்திரன் ஆகியோரை கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, அனைத்து பதவி மற்றும் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். பின்னர் 2014ஆம் ஆண்டு செ. செயலலிதா முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads