செம்பனார்கோயில் இராமசுவாமி பிள்ளை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செம்பனார்கோயில் இராமசுவாமி பிள்ளை (1880 - 1923) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.

இசை வாழ்க்கை

இராமசுவாமி பிள்ளை ஆரம்பத்தில் தனது தந்தையார் பல்லவி வைத்தியநாதப் பிள்ளையிடம் நாதசுவர இசையினைக் கற்றார். பிறகு கோட்டை சுப்பராய பிள்ளை என்பவரிடம் மேலும் கற்றுத் தேர்ந்தார். தனது வாசிக்கும் திறன் காரணமாக பல்வேறு இசை சமசுதானங்கள், ஆதினங்களின் ஆதரவினைப் பெற்றார். மைசூர் சமசுதானத்தின் ஆசுதான வித்துவானாக இருந்தார்.

இவருடன் இணை சேர்ந்து தவில் வாசித்தவர்களில் நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை, அம்மாசத்திரம் கண்ணுசாமிப் பிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தனது மகன்கள் தக்சிணாமூர்த்தி, கோவிந்தசுவாமி ஆகியோருக்கு நாதசுவரம் பயிற்றுவித்து இசையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

Remove ads

சிறப்பு

இராமசுவாமி பிள்ளையின் இசையினை கொலம்பியா ரிக்கார்ட்ஸ் கம்பெனி, 78 ஆர். பி. எம். இசைத்தட்டு ஒன்றின் உருவாக்கத்திற்காக ஒலிப்பதிவு செய்தது. இப்பெருமையினைப் பெற்ற முதல் நாதசுவர இசைக் கலைஞர் இவராவார்.

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads