செயலற்ற நிறமியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செயலற்ற நிறமியன் (heterochromatin) என்பது நிறமியனில் உள்ள ஒரு வகையாகும். இவைகளில் இசுடோன் புரதம் மிக இறுக்கமாக சுற்றி கட்டமைக்கப்பட்டு உள்ளதால், இவைகளால் மரபணுவை வெளிபடுத்த முடியாது.இக்கரணியத்தால் இவற்றிக்கு செயலற்ற நிறமியன் எனப்பெயர். GTG பட்டை (GTG banding) என்னும் முறையில் நுண்நோக்கியில் பார்த்தல், இவைகள் கறுத்த நிறத்தில் தோற்றமளிக்கும். நிறப்புரியில் அமைந்துள்ள சில வரிசைகள் (Satellite sequence), நடுப்புள்ளி என்னும் சென்றோமியர் போன்ற அமைப்புகள், இசுடோன் புறத்தால் மிக இறுக்கமாக சுற்றப்பட்டு இருக்கும். இதனால் இவைகள் மரபணுவை வெளிபடுத்த முடியாது.

மேலும் மரபணு வெளிப்படுத்தும் ஆற்றலை பொருந்து, இரு வகையாக பிரிக்கப்படும்.
நிறை செயலற்ற நிறமியன் (Constitutive heterochromatin) :
இவைகளால் மரபணுவை வெளிபடுத்த முடியாது.
குறை செயலற்ற நிறமியன் (Facultative heterochromatin):
இவைகளில் செயலூக்கிகளால் கட்டுபடுத்தப்பட்ட அமைப்பினால் மரபணு சில வேளைகளில் வெளிபடகூடும்.
Remove ads
இவற்றையும் பார்க்க:
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads