செய்மதித் தொலைக்காட்சி

From Wikipedia, the free encyclopedia

செய்மதித் தொலைக்காட்சி
Remove ads

செய்மதி தொலைக்காட்சி (Satellite television) என்று தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வழியே பரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக இந்த நிகழ்ச்சிகள் வெளிப்புறத்தில் உள்ளவோர் பரவளைய வடிவ வானலை வாங்கி (செயற்கைக்கோள் சட்டி) மூலம் பெறப்படுகிறது. கம்பித்தடம் பதிக்க இயலாத தொலைவுகளையும் நிலப்பகுதிகளையும் செய்மதி தொலைக்காட்சி எட்டுகிறது. உள்ளூர் கம்பித்தட தொலைக்காட்சி சேவையாளர்கள் இவ்வாறு செய்மதிச் சட்டி மூலம் பெறப்படும் குறிகைகளை உள்வாங்கி பல்வேறு செய்மதிகளிலிருந்து பெறப்படும் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளைத் தொகுத்து கம்பிவடம் மூலம் பரப்புகின்றனர்.

Thumb
செய்மதி சட்டிகள்

நேரடியான விண்ணின்று வீடு சேவையாளர்கள் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளை இவ்வாறுத் தொகுத்து மீண்டும் மற்றொரு செய்மதி மூலம் அனுப்புகின்றனர். வீடுகளில் உள்ள தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி மூலம் குறியீடுகள் நீக்கப்பட்டு காட்டப்படுகின்றது. தனியர் கணினிகளில் பெறுவதற்கேற்ப செய்மதி தொலைக்காட்சி இசைவிகள் ஓர் மின்அட்டை அல்லது யூஎஸ்பி சேமிப்பகத்தில் கிடைக்கின்றன.[1][2][3]

பொதுமக்களுக்கான விண்ணின்று வீடு தொலைக்காட்சி இரு வடிவங்களில் வழங்கப்படுகின்றன:அலைமருவி மற்றும் எண்மருவி. அண்மைக் காலத்தில் அலைமருவித் தொலைக்காட்சி பரப்புகை குறைந்து எண்மருவி தொலைக்காட்சி வலுப்பெற்று வருகிறது.

Remove ads

வெளி இணைப்புகள்

வரலாறு
அலைவரிசைகளும் செய்மதி தொகுதிகளும்
தடங்காண் அமைப்பும் பயனுடைமைகளும்
பொதுவானவை
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads